Blackberry Playbook Vs Kindle fire

463

 944 total views

Blackberry Playbook மற்றும் Amazon Kindle fire ஆகிய இரண்டு Tablet-களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றுகின்றன. இவை விலையில் மாறுபடுகின்றன.

இந்த இரண்டு Tablet-களின் முக்கிய அம்சங்களைப் பார்க்கும் போது இரண்டுமே 7 inch அளவிலான display கொண்டிருக்கின்றன. Blackberry  177 பிபிஐ pixel அடர்த்தியுடன் 600 x 1024 pixel resolution கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் kindle fire 170 பிபிஐ pixel அடர்த்தியுடன் 1024 x 600 pixel resolution கொண்டுள்ளது.

இந்த இரண்டுமே 3.5 மிமீ ஆடியோ ஜாக்குடன் ஒலி பெருக்கியையும் கொண்டுள்ளன. கேமராவைப் பொருத்தவரை blackberry ஆட்டோ focus மற்றும் 2592×1944 pixel resolution 5 mega pixel முக்கிய கேமராவைக் கொண்டிருக்கிறது. ஆனால் kindle fire இந்த முக்கிய கேமராவைக் கொண்டிருக்கவில்லை. அதுபோல் blackberry-ல் இந்த முக்கிய கேமரா மூலம் 30எப்பிஎஸ் வேகத்தில் 1080பி resolution கொண்ட வீடியோ வசதி உண்டு. அதுபோல் 3 mega pixel கொண்ட துணை கேமராவும் blackberry-ல் உண்டு. ஆனால் kindle fire-ல் கேமரா வசதி கிடையாது.

இணைப்பு வசதிகளைப் பார்த்தோமானால் blackberry Wi-Fi 802.11 எ/பி/ஜி/என்னையும் அதே நேரத்தில் Kindle fire 802.11 பி/ஜி/என்னையும் கொண்டிருக்கின்றன. அதுபோல் blackberry-ல் ப்ளூடூத் 2.1 வசதி உண்டு. ஆனால் kindle fire-ல் இந்த வசதி கிடையாது. இரண்டுமே USB மற்றும் micro USB வி2.0 வசதியைக் கொண்டுள்ளன.

மேலும் சிப்செட்டைப் பொருத்தவரை இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே டிஐ ஒஎம்எபி 4430ஐக் கொண்டுள்ளன. அதுபோல் Dual core ARM cortex – எ9 processor இந்த இரண்டு டேப்லெட்டுகளிலும் உண்டு. இயங்கு தளத்தைப் பொருத்தவரை blackberry அதன் இயங்கு தளத்திலும் Kindle fire Android இயங்கு தளத்திலும் இயங்குகின்றன.

வடிவமைப்பை பொருத்தவரை இரண்டு டேப்லெட்டுகளும் ஒன்றாகத் தெரிந்தாலும் blackberry playbook சற்று மெல்லியதாக இருக்கிறது. இரண்டுமே multi touch வசதி கொண்ட display கொண்டிருந்தாலும் Kindle fire கொரில்லா glass கொண்டுள்ளது.

விலையைப் பொருத்தமட்டில் blackberry playbook ரூ.20000க்கும், kindle fire ரூ.15000க்கும் விற்கப்படும்.

You might also like

Comments are closed.