ASUS Transformer Vs Apple iPad 2

475

 1,000 total views

ASUS Transformer மற்றும் Apple iPad2 ஆகிய இரண்டும் மிகவும் சக்தி வாய்ந்த Tablet-கள் ஆகும். ASUS Eee Pad Transformer Tablet தனது சிறப்பான hardware-கள் மற்றும் QWERTY physical Keyboard மற்றும் மலிவு விலை போன்ற அம்சங்களால் பெரும்பாலான மக்களைக் கவர்ந்துவிட்டது. அதனால் இப்போது ASUS நிறுவனம் ASUS Transformer Prime என்ற மிகவும் மேம்படுத்தப்பட்ட புதிய Tablet-ஐ களமிறக்குகிறது.

அதனால் இந்த ASUS Transformer Prime  Apple-ன் iPad2க்கு சரியான போட்டியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. Apple iPad2ன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்றால் பல நிறுவனங்கள் Apple-ன் iPad2 போன்ற Tablet-களைத் தயாரிக்க முனைப்போடு இருக்கின்றன. அந்த அளவிற்கு இந்த iPad2  கொடிகட்டிப் பறக்கிறது.

இப்போது இந்த ASUS Transformer Prime மற்றும iPad2 ஆகிய இரண்டு Tablet-களின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அவை வியப்பில் ஆழ்த்திவிடும். அதாவது ASUS Prime Tablet

9.7 inch screen, –  768 x 1024 Pixel resolution கொண்ட LED, GPS,  TFT capacitive  தொடுதிரை கொண்டு இருக்கிறது. 0.7MB மற்றும் 960 x 720 Pixel Camera.  இந்த கேமரா 720பி வீடியோவை support  செய்யும். ஆனால் இதில் LED flash இல்லை. ஆனால் ஜியோ டோக்கிங் உண்டு.

iPad 2

10.1 inch screen, 1280 x 800 Pixel resolution கொண்ட IPS + LCD capacitive  தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. auto focus, LED flash மற்றும் 3264×2448 Pixel கொண்ட 8MB ரியர் கேமரா உள்ளது. அதுபோல் 1.2MB முகப்பு கேமராவும் உண்டு. இந்த கேமரா 1080பி வீடியோவை support செய்யும். இந்த கேமராவில் ஜியோ டேக்கிங் போன்ற வசதிகளும் உண்டு.

சேமிப்பு வசதிகளைப் பார்த்தால் இரண்டு டேப்லெட்டுகளுமே கணக்கில்லாத Phone book மற்றும் call record-களைக் கொண்டுள்ளன. Prime Tablet-ல் external சேமிப்பு இல்லை. ஆனால் இதன் internal சேமிப்பு 16/32/64 GB ஆகும். அதுபோல் இதில் card slot இல்லை. ஆனால் iPad 2 external சேமிப்பு 32 GB வரை விரிவுபடுத்தக்கூடிய micro SD வசதி கொண்டு 32GB அல்லது 64GB ஜிபி internal சேமிப்பைக் கொண்டுள்ளது. ஆனால் RAM பொருத்தவரை Prime 512 MB, iPad 2 1GB-யையும் கொண்டுள்ளன.

அடுத்ததாக தகவல்களை முறைப்படுத்த , EDGE மற்றும் 3ஜி HSTPA 850 / 900 / 1900 / 2100 போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் iPad2ல் இத்தகைய வசதிகளைப் பார்க்க முடியாது. இரண்டு Tablet-களிலுமே Wi Fi 802.11 எ/பி/ஜி கொண்டிருக்கின்றன. Bluetooth பொருத்தவரை Prime எ2டிபி மற்றும் இடிஆர் வசதியுடன் கூடிய Bluetooth 2.1ஐ கொண்டிருக்கிறது. ஆனால் iPad 2 எ2டிபி வசதியுடன் கூடிய Bluetooth 2.1ஐ கொண்டிருக்கிறது.

இரண்டுமே micro USB connector  கூடிய USB 2.0வைக் கொண்டுள்ளன. அதுபோல் இரண்டிலும் GPS  வசதியும் உண்டு. Network support பார்த்தால் Prime GSM 850 / 900 / 1800 / 1900 உடன் கூடிய 2ஜி Network மற்றும் HSTPA 850 / 900 / 1900 / 2100 உடன் கூடிய 3ஜி Network போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இரண்டுமே Apple iPad 2ல் இல்லை.

அதுபோல் பொழுதுபோக்கு வசதிகளுக்காக இரண்டுமே MP3, WAV, WMA மற்றும் AAC பைல்களைக் கொண்டுள்ளன. இரண்டிலும் video player  உண்டு. ஆனால் iPad2ல் கூடுதலாக MP4, H.264/H.263 பைல் support போன்ற வசதிகளும் உள்ளன. இரண்டிலுமே games உள்ளன. ஆனால் இரண்டுமே FM Radio  கொண்டிருக்கவில்லை.

Battery பொருத்தவரை Prime லை-பிஒ 6930 MHz கொண்ட standard battery-ம், iPad2 standard battery-ம் கொண்டிருக்கின்றன. Prime-ன் standby நேரம் 720 மணி நேரம் ஆகும். அதே நேரத்தில் iPad2ன் standby நேரம் 900 மணி நேரம் ஆகும். அதுபோல் Prime  10 மணி நேரம் இயங்கு நேரத்தையும், அதே நேரத்தில் iPad2 12 மணி நேரம் இயங்கு நேரத்தையும் கொண்டுள்ளன.

Prime-ன் மொத்த பரப்பு 241.2 x 185.7 x 8.8 மிமீ ஆகும். அதே நேரத்தில் iPad2ன் தடிமன் 8.3மிமீ ஆகும். அதுபோல் Prime Tablet 607 கிராம் எடையையும் iPad 2 586 கிராம் எடையையும் கொண்டுள்ளன.

இயங்குதளத்தைப் பொருத்தவரை Prime Tablet Android ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் 4 இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது. இதை 5ற்கு upgrade செய்ய முடியும். iPad 2 Android V3.2 ஹன்கோம்ப் இங்குதளத்தைக் கொண்டிருக்கிறது. இதை V4.0ற்கு upgrade செய்ய முடியும்.  Prime Dual core 1 ஜிஹர்ட்ஸ் coretex-எ9 Processor-ம் அதே நேரத்தில் iPad2 க்வாட்-கோர் 1.3 ஜிஹெர்ட்ஸ் coretex-எ9 Processor-ம் கொண்டுள்ளன.

விலையைப் பொருத்தமட்டில் iPad2 ரூ.32,000/-ம் Prime tablet  ரூ.35,000/- ஆகும்.

You might also like

Comments are closed.