புதுவிதமான ஈமோஜி தேடுபொறி :

437

 648 total views

யூ -டியூபில் இனி நாம் விருப்பட்ட வீடியோக்களை ஈமோஜிக்களின் துணையோடு காணலாம். இனி அடிக்கடி எழுத்துப் பிழையோடு டைப் செய்து நமக்கு பிடித்த வீடியோக்களை காணுவதற்கு பதில் ஈமோஜிக்களைக் கொண்டு நமக்கு பிடித்த வீடியோக்களை அணுகும் முறையை ஆம்ஸ்டர்டாமி மற்றும் குவால்கம் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிமுகபடுத்தியுள்ளனர்.
ஈமோஜிக்கள் என்பது மொழிகளைக் கடந்து அனைத்து நாட்டை சேர்ந்தவரும் பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் விதமாய் அமைந்த ஒன்றே !


சாதரணமாகவே தேடுபொறிகள் எழுத்துகளை கொண்டோ அல்லது குரல் தேடல்களைக் கொண்டுதான் இதுவரை அமைந்திருந்தது.இதனால் சரியாக டைப் செய்து பலகாதவர்கள் அல்லது இணையத்தினை இதற்கு முன் உபயோகிக்காதவர்கள் ஆகியோருக்கு இது ஒரு இணையத்தில் வீடியோக்களை கண்டு ரசிக்க எளிதான வழியாக இருக்கும் .
ஒரு குறிப்பிட்ட வீடியோவைத் தேடி சிறிது பயனளிக்காதது போலத் தோன்றினால் இந்த ஈமோஜிக்களை உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுக்க தயாராக உள்ளது. 1000 ஈமோஜிக்களால் 45000 யூடியூப் வீடியோக்களை தேடுபொறி கொண்டு தேடும் வண்ணம் உருவாக்கியுள்ளனர் .

உதாரணமாக நீங்கள் தற்போது இறைச்சி ஈமோஜியை தேர்ந்தேடுத்தால் தேடுபொறி உங்களுக்காக இறைச்சி பற்றிய வீடியோ காட்சிகளை தேர்ந்தேடுத்து வழங்கும் .
இது தற்போது புதுவித தேடலையும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இனி பயனர்கள் அடிக்கடி எழுத்துப் பிழையோடு டைப் செய்யாமல் ஈமோஜி புகைப்படங்களைக் கொண்டு தேட ஆர்வம் கொள்வர்.bing-emoji-keyboard-794x600

எப்படி இருந்தாலும் ஈமோஜி பட்டன்கள் யூ-டியூபில் நமக்கு பிடித்த வீடியோக்களை காணுவதில் ஒரு பெரும் பங்கு வகிப்பது புதியதே . உதாரணமாக “foot ball ” என டைப் செய்வதற்கு பதில் ஒரு கால் பந்து ஈமோஜியை வழங்கினால் தேடுபொறி பல வீடியோக்களை சில விநாடிகளில் நமக்கு கொடுக்கும்.இது bing மற்றும் yelp வலைதளங்களிலும் ஆதரவளிக்கும் படி செய்யப்பட உள்ளது. இது கண்டிப்பாக சாதரணமாக தேடும் தேடுபொறிகளை விட சற்று புதிதான அனுபவத்தை பயனர்களுக்கு நிச்சயம் தரும்.இந்த ஈமோஜிகள் சமீப காலமாக முதலில் சாதரணமாக குறுந்தகவலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் சமூக ஊடகங்களில் பெரும் பங்கு வகித்தது தற்போது தேடுபொறிகளில் களமிறங்க உள்ளது  வரவேற்கத்தக்கதே !

You might also like

Comments are closed.