சர்வதேச அழைப்புகளை we Chat -ல் பெறலாம் !

401

 656 total views

சீனாவின் மிகப் பிரபலமான குருந்தகவல் செயலியான we  Chat  டிசம்பர் 31 ஆம் தேதியன்று we  Chat Out என்கிற சிறப்பு நுட்பம் ஒன்றை வெளியிட்டது. we  Chat  என்பது குறுந்தகவல் செயலின் மூலமாக  மற்ற மொபைல் மற்றும் அனைத்து  லேண்ட்லைன்  எண்களுக்கு  எங்கேயும் எப்போதும்  கால் செய்யும் புது சிறப்பினை தந்தது. இது மற்ற  குருந்தகவல் செயலியைப் போலல்லாமல் தெளிவான கால்களை உயர்தரத்துடனும்  மற்றும்  சர்வதேச   கால்களை மலிவான  விலையிலும்  தந்தது. தற்போது we  Chat பயனர்களின்  எண்ணிக்கை 500 மில்லியன் ஆக உயர்ந்துள்ள பெருமை  we  Chat Out-கே உரியதாகும்.  இந்த  நுட்பம் முதலாவதாக ஹாங்காங்  , அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அளிகப்பட்டுள்ளது.கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்படி செய்யப்படும்.  we  Chat Out வருவதற்கு முன்னர்  we  Chat குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைக்  கொண்டிருந்தாலும் அவை அவ்வளவாக தெளிவான அழைப்புகளை கொண்டிருக்கவில்லை.சர்வதேச அழைப்புகளை இதுபோன்ற குறுந்தகவல் பயன்பாடுகளில் காண்பது இது முதல் முறையாக இருக்காது . ஏனெனில் சர்வதேச அழைப்புகளை இதற்கு முன்  ஏசியாவின் மிக முக்கிய குறுந்தகவல் செயலியான லைன் போன்ற குறுந்தகவல் செயலிகளில் கொண்டிருந்தாலும் அவைகளால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஏனெனில் அவை முழுவதுமாகவே சர்வதேச அழைப்புகளுக்காக ஒதுக்க பட்டிருந்த காரணத்தினால்  அவ்வளவாக பயனர்களை கவரவில்லை.     சீனாவின் அதிகபயனர்களைக்   கைவசம் கொண்ட we  Chat போன்ற குறுந்தகவல் செயலியில்  இதுபோன்ற நுட்பத்தை  புகுத்தியுள்ளதால்  அறிமுகமான  வெகு குறைவான நாட்களிலேயே அதிக பயனர்களைக் ஈட்டியுள்ளது. இது நேரிடையாகவே   ஸ்கைப் போன்ற சர்வதேச  கலந்துரையாடலை  தரும் செயலிகளுக்கு  போட்டியாக உள்ளது.  we  Chat   அனைத்து வயது  தரப்பினராலும்  எப்போதும் பயன்படுத்தப்படுவதால்  எளிதில் அனைவரையும் சென்றடைய வாய்ப்புள்ளது.  இதில் 0.99$டாலர் செலுத்தி 100நிமிட டாக் டைமை இலவசமாக பெறலாம்.  இதில்  we  Chat  வாலட்  என்ற அம்சம் அதாவது கிரடிட் கார்டின் மூலம் கடன் பெரும் வசதிகள்  போன்றவற்றை பெற்றிருப்பதால்  உடனுக்குடன் ரீ-சார்ஜ்  செய்து சர்வதேச கால்களை தெளிவான தரத்துடன் பெறலாம்.  ஆகையால் குறுந்தகவல் பயன்பாடுகளில் இதனை அறிமுகபடுத்தியுள்ளதால் மேலும் அதிக பயனர்கள்  we  Chat யினை  அணுக வாய்ப்புள்ளது.

You might also like

Comments are closed.