WhatsAppஆல் அதிகரிக்கும் விவாகரத்து!

1,065

 2,758 total views

இத்தாலிநாட்டில் வாட்சப்பால் விவாகரத்து அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. விவாகரத்து கேட்கும் போது வாட்சப் செய்திகளைத் தான் நம்பிக்கை இல்லாததற்க்கு ஆதாரமாக காட்டப்படுவதகவும் இந்த ஆய்வு சொல்லுகிறது. மேலும் இத்தாலி நாட்டில் தம்பதிகளுக்குள் நம்பிக்கை இன்மை அதிகரிக்க சமுக வலைதளங்கள் அதிக காரணமானதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Italian Association of Matrimonial Lawyers என்கிற வழக்கறிஞ்சர் குழு தங்களுக்கு வந்த விவாகரத்து வழக்குகளின் மூலம் இதை உறுதி செய்கின்றனர். இதேபோல 2012 இல் “இணையதளத்தால் விவாகரத்து” என்ற பெயரில் எடுத்த ஆய்வு ஒன்றும் இந்த கருத்தை உறுதி படுத்துகிறது. இங்கிலாந்தில் நடைபெரும் மொத்த விவாகரத்துகளில் 1/3 பகுதி சமுக வலைதளங்களால் நடைபெறுவதாக அவர்கள் சொல்லுகிறார்கள்.

மேலும் Journal of Cyberpsychology என்ற இதழ் நடத்திய ஆய்வின் முடிவும் இதே கருத்தை ஒத்துப் போவதாகவே உள்ளது. அதிகமாக சமுக வலைதளங்களை பயன்படுத்துவது தனது வாழ்க்கைத் துணையை ஏமாற்றவே, என்பது இந்த ஆய்வு சொல்லும் செய்தியாகும்.

சமுக வலைதளங்கள் என்பது முந்தைய நட்பை புதிப்பித்து கொள்ள உள்ள வழியாகும். ஆனால் வாழ்க்கைத்துணை இதனை விரும்பாததால் இதனால் அதிக விவாகரத்து நடைபெருகிறது. எல்லாக் கண்டுபிடிப்புகளிலும் இது போன்ற குறைகள் இருந்தாலும் அவற்றைத் தாண்டி அவை பல்வேறு நன்மைகளைத் தந்து கொண்டுதான் இருக்கின்றதன. குறைகளை முன்னிறுத்தி நவீனத்தை புறக்கணிப்பது பிற்ப்போக்குத் தனமாகும்.

சில தினங்களுக்கு முன் ஒரு செய்தி பார்த்தோம் அது முகநூல் பயன்படுத்துவோர் வேலை வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும் பிரச்சனை பற்றியதாக இருந்தது. அதிலும் சுயமி படங்கள் அதிகமாக பதிபவர்களின் மனநிலையை அறிவதாகவும், வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் முகநூல் பக்கங்களை நிறுவனங்கள் கண்காணிப்பதாகவும் செய்திகளை அதில் பார்த்தோம். சமுகவலைதளங்கள் நம் தனிமனித வாழ்க்கையை பாதிக்காமல் எச்சரிக்கையாக நாம் பயன்படுத்த வேண்டும். நம் TechTamil Karthik , இதற்கு கடினமான மொபைல் Lock Code நல்ல தீர்வாக இருக்கும் என இத்தாலிக்கு சொல்லியுள்ளார்.

You might also like

Comments are closed.