யுனைடெட் ஏர்லைன்ஸ் இணைய தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்தால் அதிரடி பரிசு கிடைக்கும்!

அனைவரது கணினியும் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அது உங்கள் வீட்டு கணினி, கைபேசி என்றாலும் மிகப் பெரிய நிறுவனங்களின் செர்வர்கலானாலும் இணையத்துடன் இணைந்துவிட்டால் பல  தாக்குதல்கள் இவை மீது தொடுக்கப்படும்.

விமான சேவை நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களின் கணினியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் அதிகமான பொருட் சேதத்தையும், பொது மக்களின் உயிர் சேதத்தையும் விளைவிக்க வாய்ப்புள்ளது.

ஆகவே, அமெரிக்காவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களின் இணையதளம், செர்வர் ஆகியவற்றில் XSS மற்றும் இன்ன பிற பாதுகாப்பு குறைபாடுககளை  கண்டுபிடிபோர்க்கு தங்களின் வெகுமதியான “மைல்ஸ்” எனும் பாயிண்ட்டுகளை அதிக பட்சமாக ஒரு மில்லியன் (பத்து  லெட்சம்) தருவோம் என அறிவித்துள்ளது.

குறைந்த பட்சம் 50,000 மைல்ஸ் பாயிண்ட்டுகள் என ஆரம்பிக்கும் வெகுமதி கொண்டு பணமே கட்டாமல் பலமுறை இவர்களின் விமானத்தில் ஒருவர் பயணிக்கலாம்.

ஏற்கனவே முகநூல் தளத்தில்  உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிபவர்களுக்கு சில ஆயிரம் டாலர் பணம் கொடுத்தது முகநூல் நிறுவனம். ஆனால் விமான சேவையின் மைல்ஸ் பாயிண்ட் என்பது பணத்தை விட அதிக மதிப்புள்ளது.

“பக் பவுண்டி” என பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இந்த சுட்டியில் உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ் தளத்திற்கு செல்லவும்.

 

Leave a Reply