​வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்.

1,169

 2,323 total views

சாதாரணமாக ஒரு கால் டாக்சி, ஆட்டோ ரிக்சா பிடித்து ஒரு இடத்திற்கு செல்வது இப்பொழுது மிகவும் எளிது. தடுக்கி விழுந்தா நம்மை தூக்கவோ , இடிக்கவோ ரோட்டில் ஆட்டோ அல்லது கால்டாக்சி கண்டிப்பாக இருக்கும்.

அமெரிக்காவில் இதுபோல் எண்ணற்ற கால்டாக்சி சேவை நிறுவனங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒரு ஐபோன் அப்ப்ளிகேசன் தூக்கி சாப்பிட்டுவிட்டது அதன் பெயர் தான் “உபெர்” (UBER)  வெகு விரைவாக புக் செய்த கால் டாக்ஸி உங்களை பிக்கப் பண்ண வரும் என்ற வாசகத்துடன் , தொழில்நுட்ப திறன்களுடன் இந்த அப் வெளியிடப்பட்டது. குறைந்த காலகட்டத்தில் சுமார் 50 நாடுகளில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் உபெர் நிறுவனத்துடன் இணைந்து ஓட்டி வருகின்றனர்.

சமீபத்தில், இந்தியாவில் சென்னை உட்பட 11 நகரங்களில் தனது சேவையை துவங்கியுள்ள உபெர், இந்தியாவில் உள்ள தனது இருவகையான போட்டியாளர்களை சமாளிக்க பிரிட்டிஷ் கால தொழில் போட்டி முறையை கையாளுகிறது.

uber_seo_car

1. பிற மொபைல் கால்டாக்சி மென்பொருள்கள்

மக்கள் உபெர் மென்பொருளைத் தான் கால் டாக்சி புக் செய்ய பயன்படுத்த வேண்டும் என்பதற்காக. ஒருவர் அவரின் Credit Cardஐ “உபெர் வாலெட்” இல் சேமித்து வைத்தால் ரூபாய் 300 மதிப்பில், முதல் ஐந்து புக்கிங்களுக்கு விலைச் சலுகை வழங்குகிறது.

2. பிற நிறுவன கால் டாக்சி ஓட்டுனர்கள்

வாகன ஓட்டுனர்கள் தங்களின் கைபேசி மென்பொருளை எப்பொழுதும் திறந்தே வைத்திருப்பதற்கு ரொக்க ஊக்கத் தொகையை வழங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விரைவில் உபெரின் நேரடி வாகன ஓட்டிகளாக மாறுவர்.

3. அனைத்து நிறுவனங்களையும் விட விலையைக் குறைத்தல்

சொல்லப் போனால்., இந்தியாவில் மிகவும் விலையைக் குறைத்து  வேண்டுமென்றே உபெர் தனது கால் டாக்சி சேவையை நட்டத்தில் நடத்தி வருகிறது. இந்த குறைந்த விலை சலுகைகளால் மக்களிடம் உபெர் எனும் பெயர் பிரபலாமாக போய்ச் சேரும் எனும் ஒரே காரணத்திற்காக அதிக பணத்தை செலவு செய்கிறது. இந்திய நிறுவனங்களை முழுமையாக இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி தானே ஒரே பெரிய கால்டாக்சி நிறுவனமாக இருக்க பல முயற்சிகள் செய்து வருகிறது. முதலீடு பெற்று அதிக சலுகைகளை வழங்கும் இணைய வர்த்தக நிறுவனங்களைப் பற்றி நான் ஏற்கனவே டெக் தமிழில் எழுதியுள்ளேன். கடந்த ஜூன் மாதம் 7200 கோடி ருபாய் முதலீடு பெற்ற இந்த நிறுவனம் , அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டாம் இடத்தில உள்ள இந்திய கால்டாக்சி சந்தையைப் பிடிக்க தனது முதலீட்டை தண்ணி போல் செலவு செய்து வருகிறது.

ஐபோன் , ஆண்ட்ரைடு , விண்டோஸ் கைபேசிகளில் உபெர் அப்ப்ளிகேசன் நிறுவிக்கொள்ளலாம். விரைவில் அதிக இந்திய / தமிழக நகரங்கள் மற்றும் டெபிட்கார்டு , நெட் பாங்கிங் வகை பணப் பரிமாற்றமும் மென்பொருளில் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.

You might also like

Comments are closed.