Latest Technology, Science & IT Industry News in Tamil

சிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம் பெறுகிறது!

0 38

எதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது.

nlogo2

முக்கியமாக

  •   மொசில்லா தமிழ் குழுமத்தின் திட்டங்களைப் பற்றிய அறிமுகம்
  • ஆண்ட்ராய்டுக்கான பயர்பாக்ஸ் தமிழில் அறிமுகம்
  • பயர்பாக்ஸ் கைப்பேசிகள்(Firefox OS Mobile Phones in Tamil) – தமிழ்
    இடைமுகப்புடன் அறிமுகம்
  • கட்டற்ற தமிழ் மென்பொருள் விநியோகம்(பயர்பாக்ஸ் உலாவி, லிப்ரேஓபிஸ்,
    இ-கலப்பை மற்றும் உபுண்டு லினக்ஸ் வட்டுகள்) – கேட்பவர்களுக்கு நிறுவியும்
    தரப்படும்

கூடுதலாக

  • தமிழாவின் திட்டங்களைப் பற்றிய அறிமுகமும் – ஆள் சேர்த்தலும் 🙂
  • தமிழாக்கத்தில் பங்களிப்பது எப்படி ? –  வழிகாட்டல்
  • கைப்பேசிகளுக்கான தமிழ் மென்பொருட்கள் – நிறுவித் தரப்படும்

உங்களின் கருத்துக்களைத் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
அத்தோடு இதற்கு ஆதரவு நல்கிய உத்தமத்திற்கும்(திரு மணியம்) மொசில்லா
அறக்கட்டளைக்கும் தமிழா குழுமத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

மொசில்லாவின் நிகழ்ச்சி:
https://reps.mozilla.org/e/tamil-internet-conference-2015-singapore/
திரண்டு வாரீர் ஆதரவு தாரீர்!
நன்றியுடன்,
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com

Related Posts

You might also like

Leave A Reply