QD தொலைக்காட்சிகள் விரைவில் அறிமுகம்

524

 991 total views

தற்போது பிரபலமாகி வரும் 3D தொலைக்காட்சிகளுக்குப்  பதிலாக QD தொலைக்காட்சி எனப்படும் புதிய தலைமுறைக்கான தொலைக்காட்சியை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இந்தப்  புதிய தொலைக்காட்சியை மடித்து எளிதில் கையில் எடுத்துக் கொண்டு போகும் விதமாகவும், பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள இந்த QD தொலைக்காட்சி மனித தலைமுடியை விட 100,000 மடங்கு சிறிய தடிமனைக் கொண்டுள்ளதாகவும், வளையும் தன்மை கொண்டதாகவும், வால்பேப்பர் முதல் பெரிய திரை வரையிலும் பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

இது Flat Screen தொலைக்காட்சியை விட தொழில்நுட்பத்திறன் அதிகம் கொண்டதாகும் இந்த QD தொலைக்காட்சி. அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Comments are closed.