மும்பை பங்குச் சந்தை 419 புள்ளிகள் அதிகம்

375

 1,775 total views

எதிர்பார்த்தது போலவே பட்ஜெட் தேதி நெருங்க நெருங்க, பங்குச் சந்தையில் பரபரப்பு அதிகமாகி வருகிறது. வியாழனன்று சந்தை சிறிது சரிந்தாலும், வெள்ளியன்று சந்தை மிகவும் ஜோராக இருந்தது என்று தான் கூற வேண்டும். துவக்கத்தில் சிறிது டல்லாக இருந்த சந்தை, பின்னர் ஜோராக வேகமெடுத்து ஓடியது. பருவ மழை வேறு ஜோராகத் துவங்கி விட்டது. 110 சதவீதம் இந்த ஆண்டு பருவ மழை இருக்கும் என்று முன்னர் கூறினர் வானிலை ஆராய்ச்சி நிறுவனத் தினர். ஆனால், தற்போது 93 சதவீதம் வரை தான் மழை இருக்கும் என்று கூறுகின்றனர். ஆராய்ச்சியில் தவறு பொய்க்காமல் வந்து விட்டதே அதுவரையில் சந்தோஷம் தான். வெள்ளியன்று சந்தை கூடியதற்கு இன்னும் ஒரு காரணம், பட்ஜெட் எதிர்பார்ப்புகள் தான்.

வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 419 புள்ளிகள் கூடி 14,764 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 133 புள்ளிகள் கூடி 4,375 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

ஸ்டேட் பாங்க்கின் வட்டி குறைப்பு கடன்களுக்கான வட்டி விகிதங்களை ஸ்டேட் பாங்க் 50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், முன்னதாக கடன்கள் வாங்கியவர்களும் பயன் பெறுவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கலாம். ஆதலால் வரும் காலாண் டில் (ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை) வட்டிச் செலவுகள் கம்பெனிகளுக்கு குறையலாம். அதே சமயம், பல புதிய வெளியீடுகள் வருமானால், வங்கிகளிடம் இருக்கும் பணம் புதிய வெளியீடுகளில் செல்லக் கூடும். ஆதலால், பணப் புழக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது. அப்போது, வட்டி விகிதங்கள் மறுபடி கூடலாம். மகிந்திராவின் ஹாலிடே ரிசார்ட்டின் புதிய வெளியீடு வெள்ளியன்று இந்த வெளியீட்டிற்கு கடைசி தினம்; 9.74 தடவை வரை செலுத்தப் பட்டுள்ளது. சிறிய முதலீட் டாளர்களின் பங்கு 2.85 தடவை வரை செலுத்தப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் 60 பங்குகள் விண்ணப்பித்திருந்தால், 20 பங்குகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். நீண்ட நாட்கள் வைத்திருக்கும் பட்சத்தில் லாபங்கள் பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

கெட்டியான சிமென்ட் கிராசிம் மற்றும் அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனங்கள் இணையப் போகிறது என்ற செய்திகள் வருகின்றன. அப்படி இணையும் பட்சத்தில், அது ஒரு மிகப்பெரிய கம்பெனியை உருவாக்கும். இரண்டு மிகப்பெரிய சிமென்ட் கம்பெனிகள் சேருவதால், கம்பெனி இன்னும் கெட்டியாகும்.

அமெரிக்கா எப்படி இருக்கிறது? : அமெரிக்காவில் நிலைமைகள் சரியாகி வருகிறது என்று தான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அங்கு இருப்பவர்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உலகின் பெரிய பங்குச் சந்தை நிபுணரான வாரன் பப்பே என்ன சொல்கிறார் தெரியுமா?

அமெரிக்காவில் இன்னும் பிரச்னைகள் சரியாகவில்லையாம். மறுபடி வீட்டுக் கடன் வாங்குபவர்கள் அதிகரித்து உள்ளனர் என்றும் செய்தி வருகிறது. சென்ற முறை பெரிய பிரச்னை, வீட்டுக்கடன்களால் தான் வந்தது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : சந்தை பட்ஜெட் எதிர்பார்ப்புகளை வைத்து இன்னும் சிறிது மேலே போக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கட்டுமானத்துறை, வங்கித் துறை, விவசாயத்துறை பங்குகள் மேலே செல்லும் வாய்ப்புகள் அதிகம்.

-சேதுராமன் சாத்தப்பன்-

You might also like

Comments are closed.