உலக அளவில் ஒரு நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்தும் Microsoft

தனது புதிய இயக்கு தளம் விண்டோஸ் 8 இல் இயங்கும் புதிய மென்பொருள்களை உருவாக்க; கணினி வல்லுநர்களின் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் “AppFest” எனும் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது.  இந்த மாதம் 21-22 தேதிகளில் KTPO –  Bangaloreஇல் நடக்க இருக்கிறது. இதில் உலக அளவில் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

18 மணிநேரம் தொடர்ந்து நடக்க இருக்கும் இந்த போட்டியில் வல்லுநர்கள்.. Windows8 இயக்கு தளத்தில் இயங்க வல்ல புதிய மென்பொருளை எழுதி வடிவாமைத்து வெளியிட உள்ளனர்.

உணவு, பொருளாதாரம், புத்தகங்கள், சமூக தளங்கள் , புகைப்படங்கள், இசை, வணிகம் என சுமார் 20 வகையான தலைப்புகளில் தங்களின் புதிய மென்பொருளை அவர்கள் எழுதலாம்.

எழுதும் இந்த புதிய மென்பொருளை அவர்கள் “App Store” எனப்படும் சந்தையில் வைத்து Windows8 பயனாளார்களிடம் விற்று பணம் சம்பாதிக்கலாம்.

உங்களுக்கு .NET நன்றாகத் தெரியும் என்றால்., பெங்களூருக்கு பஸ்ஸப் பிடித்து ஒரு கை பாருங்கள். அதற்கு முன் இங்கே உங்களின் வருகையை பதிவு செய்யுங்கள்.

நீங்கள் பெரிய ரவுடி என அவர்கள் நம்பினால் உங்களை அழைப்பார்கள்.

Related Posts

Leave a Reply