Internet இல் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் (புள்ளி விவரங்கள்)

634

 1,263 total views

பல்வேறு நாடுகள் பல்வேறு இன மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒன்று சேர்க்கும் மிகப்பெரிய ஊடகமாக இப்பொழுது இன்டர்நெட் விளங்குகிறது. இன்டர்நெட் வழியே ட்விட்டர்,பேஸ்புக்,கூகுள்+ போன்ற சமூக இணைய தளங்களில் நாளுக்கு நாள் நூற்றுகணக்கான பேர் நண்பர்களாக உருவாகின்றனர். மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இப்பொழுது இணையம் வளர்ந்து வருகிறது. இன்டர்நெட் இல்லை என்றால் இன்னும் கடிதப்போக்குவரத்தை நம்பிகொண்டிருக்க வேண்டும், நாம் எழுதுவதை உலகம் முழுக்க படிப்பார்கள் என நினைத்து கூட பார்த்திருக்க முடியாது.

உலகில் இணையம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது. மக்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இணையத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். இப்படி இணையத்தை பயன்படுத்தும் மக்களை மொழிகளின் அடிப்படையில் எந்த மொழிகளில் அதிகமாக இணையத்தை உபயோகிக்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை கீழே காண்போம்.
உலகிலேயே ஆசிய கண்டத்தில் தான் அதிகளவில் இணையத்தை உபயோகிக்கின்றனர். ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில மொழியை 536 மில்லியன் மக்களும் சீன மொழியில் 509 மில்லியன் மக்களும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். முதல் பத்து இடங்களில் இந்திய மொழிகள் ஒன்று கூட இல்லை.

முதல் பத்து இடங்கள்:

  1. ஆங்கிலம்      –    536 மில்லியன்
  2. சீன மொழி     –    509 மில்லியன்
  3. ஸ்பானிஷ்     –    164 மில்லியன்
  4. ஜப்பானீஸ்     –    99 மில்லியன்
  5. போர்ச்சுகீஸ் –    82மில்லியன்
  6. ஜெர்மன்          –    75 மில்லியன்
  7. அரேபிக்           –    65 மில்லியன்
  8. பிரெஞ்சு          –    59 மில்லியன்
  9. ரஷியன்            –   59 மில்லியன்
  10. கொரியன்        –   39 மில்லியன்

ஆங்கிலம் முதல் இடத்தில் இருந்தாலும் சமீப காலமாக ஆங்கில மொழி உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை சரிவை நோக்கி செல்கிறது. மாறாக சீன, ரஷியன், அரேபிய மொழிகள் சிறந்த வளர்ச்சியை அடைந்து வருகிறது.

You might also like

Comments are closed.