Infosys மற்றும் இஸ்ரேல் ஏற்படுத்திய தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்

677

 1,643 total views

உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Infosys நிறுவனம் தற்போது இஸ்ரேல் நாட்டுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் மூலம் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

தகவல் பாதுகாப்பு, சென்சார்கள், பகுப்பாய்வு, cloud  குறித்த வளர்ந்து வரும் தொழில்நுட்பம் போன்ற பகுதிகளில் Infosys மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் இடையே தொழில்துறை ஒத்துழைப்பு ஏற்படவும்,   பல்வேறு தொழில்களில் ஏற்படும் ஏற்புடைய சவால்கள் மற்றும் அதற்குரிய தீர்வுகளை வரையறுப்பதில்இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வழிவகை ஏற்பட்டுள்ளது.

இன்று வேகமாக தொழில் துறை வளர்ந்து வருகின்றது. அதே அளவுக்கு அந்த நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களும் அதிகம். இதனை சமாளிக்க வேண்டும் என்றால் வேகமாகவும் சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் வெற்றி காண முடியும்.

Subu Goparaju, நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர், தனது உரையில்  தெரிவிக்கையில் இந்த இரண்டு அமைப்புகளை ஒன்றினைப்பதனால் வாடிக்கையாளர்களின் தேவைகளை சிறந்த முறையினில் தீர்க்க உதவும் என்றும் எதிர்காலத்தில் நிறுவனங்களின் கட்டமைப்பு தேவைகளை கண்டறிந்து அதனை முன்னதாகவே தீர்வு காணமுடியும் என்று தெரிவித்தார்.

தொழில்துறை மந்திரி தனது உரையில் தெரிவிக்கையில் இஸ்ரேல் ஏற்றுமதியாளர்கள் இந்தியாவிற்கு தொழில்நுட்பங்களை வழங்கும் நோக்காத்தின் ஒரு பகுதியே இந்த ஒப்பந்தம் என்றும் இஸ்ரேல் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புக்களை கண்டறிய தவறி விட்டனர் என்றார்.

You might also like

Comments are closed.