Green Screen Technology in Cinema Industry

502

 1,468 total views

Green screen technology – இதை நீங்கள் கேள்விபட்டிருக்கிறிர்களா?. இந்த தொழில்நுட்பத்தை கேள்விபட்டிருக்கிறிர்களோ இல்லையோ ஆனால் கண்டிபாக பார்த்திருப்பிர்கள். சமீபகாலமாக ஹாலிவுட்டில் வரும் அத்தனை படங்களிலும் இதன் ஆதிக்கம் மிக அதிகம்.

பச்சை திரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை மலைப்பிரதேசத்தில் எடுத்ததை போலவும், மனிதர்கள் ஒளிப்பதிவு செய்ய சிரமமான இடங்களில் எடுத்ததை போன்று காண்பிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மிக சிரமமான ஒளிப்பதிவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் இன்று மிக எளிதான காட்சிகளுக்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் காலமும் செலவும் மிச்சமாவது இதன் சிறப்பம்சமாகும்.

பச்சை திரையின் முன்பு ஒருவரை நிற்க வைத்து எடுக்கப்படும் வீடியோ, பின்பு தனியாக எடுக்கப்பட்ட வேறு ஒரு வீடியோவில் எளிதாக சேர்க்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் வீடியோக்களை மற்றவற்றுடன் இணைப்பது எளிதாக இருப்பதால் தான் இதை பச்சை திரை தொழில்நுட்பம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த தொழில்நுட்பத்தின் பெயர் ”Chroma key compositing”. பச்சை தவிர நீல நிற திரையும் இதற்கு பெரும்பாலும் பயன் படுத்தப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் திரைப்பட துறை மட்டும் அல்லாது விளம்பர மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த பச்சை திரை தொழில்நுட்பம் பற்றி எவ்வளவு தான் எழுதினாலும் இந்த தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட வீடியோவை பார்ப்பதில் இருக்கும் சுவாரஸ்யத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. எனவே உங்களுக்காக பச்சை திரை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் காட்சி தொகுப்பு காணொளியை இணைத்துள்ளோம்.

You might also like

Comments are closed.