2017ல் விமானங்களின் மூலம் டோர் டெலிவரி :

496

 692 total views

ஏற்கனவே கூகுள் அதன் பலூன் சேவையின் மூலம் உலகளாவிய முறையில் அனைவருக்கும் வை-பை கிடைக்கும் வழியினை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மூழ்கிக்கொண்டு வருகிறது. தற்போது கூகுள் அதன் விமானக வழி டோர் டெலிவரி அமைப்பை 2017க்குள் கொண்டுவரும் முயற்சியில் உள்ளது.இதன்மூலமாக இந்த ஆளில்லா விமானத்தின் உதவி கொண்டு இணையத்தில் ஆர்டர் செய்யும் பொருள்களை 30 நிமிடங்களில் பயனர்களின் கைக்கு கொண்டு சேர்க்கும் அம்சத்தை தர உள்ளது. இந்த ஆளில்லா விமானம் உள்நாட்டிலயே கூகுளால் உருவாக்கபட்டது.கூகுளின் இந்த விங் திட்டம் முதன் முதலாக டோர் டெலிவரியை அதிகாரப்பூர்வமாக விண்ணில் செலுத்திய முதல் நிறுவனமாகும். “இந்த திட்டத்தின் மூலம் 2017 ல் வணிக வர்த்தகத்தை ஒரு படி முன்னேற்றி கொண்டுபோவதே எங்கள் குறிக்கோள்” என இத்திட்டத்தின் தலைவர் திரு.டேவிட் கூறியுள்ளார்.

Project+Wing+-+Still+02-960Google -ன் ட்ரோன் விநியோக திட்டத்தை நாம் கேள்விப்படுவது இது புதிதாக இருக்காது ஏற்கனவே 2014-இல் இதைப்பற்றிய அறிவிப்பை கூகுள் அறிவித்திருந்தது. அதன் ஆரம்ப வேலையாக சொந்தமாக விமானம் கட்டப்பட்டு அதன் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது.கூகுளின் இந்த சேவை எங்கெங்கு இருக்கபோகிறது ? எந்த மாதிரியான தயாரிப்புகளை வழங்க உள்ளன போன்ற தகவல்களை பற்றி எதுவும் கூறவில்லை.

BBC யிலிருந்து வந்த அறிக்கையின் படி கூகுளின் ஆளில்லா விமானம் 2.3Kg பொருள்களை 30நிமிடங்களில் கொண்டு வந்து சேர்க்கும் என கூறியுள்ளனர்.கூகுளின் திட்டத்திற்கு பச்சைக் கொடி பெற்று விட்டால் அடுத்த கட்டமாக அமேசான் , அலிபாபா போன்ற வணிக தளங்களும் இத்திட்டத்தை மேற்கொள்ளும் .இத்திட்டத்தால் கடற்கரை மற்றும் மலைப் பகுதிகளிடையே வசிக்கும் மக்கள் தாங்கள் ஆர்டர் செய்த உடனே அரை மணி நேரத்திற்குள் வீட்டு வாசலுக்கு வந்த ஆர்டர் செய்த பொருள்களை பெரும் அதிசயத்தை நுகரலாம். இதனால் அவசர கால மருத்துவ விநியோகம் போன்றவற்றிற்கு பயனுள்ளதாக அமையலாம் .2017இல் ஆளில்லா விமானத்தைக் கொண்டு மின்னணு விநியோகம் ஒரு முன்னேற்றத்தினை காணும் என நம்பலாம்.

You might also like

Comments are closed.