Facebook Vs Google

446

 927 total views

உலகின் மிகப் பெரிய சமூக இணையத்தளமாக Facebook விளங்குகிறது. பெரிய இணைய நிறுவனமாக Google இயங்குகிறது. Google + மூலம் சரியான போட்டியைச் சென்ற ஆண்டில் Facebook தளத்திற்கு வழங்கியது Google.

சமூக தளத்தில் முதல் இடத்தைப் பெற இரண்டிற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதன் மூலம் வரும் விளம்பர வருமானத்தை அதிக அளவில் கைப்பற்றவே இந்த போட்டி. இது நடப்பாண்டில் இன்னும் அதிகமாகும் என்று இத்துறை வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் இதுவரை Facebook தளத்தின் கை தான் ஓங்கி உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டில் Google + சரியான போட்டியைத் தரும்.

இதனால் இந்த இரண்டினையும் பயன்படுத்துவோருக்கும் லாபம் தான். பலவிதமான புதிய வசதிகளைத் தந்து தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதுடன் புதிய வாடிக்கையளர்களையும் இழுக்க இவை இரண்டும் முயற்சிக்கும்.

அதே போல Third Party என அழைக்கப்படும் பிற நிறுவனங்களும் இந்த இரண்டு தளங்களுக்குமான add on தொகுப்புகளைத் தந்து இந்த சந்தையில் தங்களுக்குமான பங்கினைப் பெற முயற்சிக்கும்.

இந்த ஆண்டு இவை இரண்டின் இடையேயான போட்டி பல முனைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Comments are closed.