​.NET Framework ​முழுவதும் OpenSource ஆக வெளியிடப்பட்டது!

996

 2,428 total views

கணினி வல்லுனர்கள் பலருக்கும் OpenSource என்றால் என்ன அதன் பயன் என்ன என்பது நன்றாகத் தெரியும். நமது Techதமிழ் இணைய தளத்தில் கூட PHP போன்ற நிரல் மொழிகளை தமிழில் கற்றுத் தருகிறேன்.

ஆனால் , உலகம் முழுவதும் பல  கணினி மென்பொருள் நிரலாக்குனர்கள் (Programmers) பயன்படுத்தும் Microsoft .NET Framework என்பது OpenSource ஆக இல்லை. அதனால் அதில் ஏதேனும் புதிய வசதியோ , தமது தேவைக்கேற்ற மாற்றத்தையோ அதன் FrameWork Coreஇல்  நம்மைப் போன்ற தனி நபர் எவரும் ஏற்படுத்த இயலாது. இரண்டு வருடத்திற்கு ஒரு முறை Microsoft புதிப்பித்து வெளியிட்டால் தான் உண்டு.
1106.Overview.png-440x0
தற்போது , அதிரடியாக இன்று முழு .NET Framework Core Opensourceஆக வெளியிடப்படும் எனும் மகிழ்வான செய்தி அதிகாரபூர்வமாக வெளி வந்துள்ளது. ​முழு மூல நிரலையும் (sourcecode ) பதிவேற்ற பிரபலமான GitHub தளத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்த GitHub தளத்தில் நீங்கள் ஆயிரகணக்கான Opensource மென்பொருள்களின் மூல நிரலை பார்க்கலாம், நீங்களும் சேர்ந்து நிரல் எழுதலாம்.​

இதனால் , .NET மொழியில் எழுதும் புதிய மென்பொருள்கள்  விண்டோஸ் கணினிகளையும் தாண்டி லினக்ஸ். மேக், ஆண்ட்ரைடு, ஐ போன் போன்றவற்றிலும் எழுதலாம்.

கடந்த பத்து வருடமாக பல புதிய நிரல்மொழிகள் (Programming Languages) Opensource ஆக வந்துள்ளது., இது மிகவும் தாமதமான முடிவு என்றாலும்., இனி பல புதிய மென்பொருள்கள் எளிதாக பல இயக்குதளங்களிலும் (Operating Systems) .NET  மூலம் எழுதப்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

You might also like

Comments are closed.