Contact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்

774

 2,581 total views

கண்ணின் கருவிழியின் மீது அணியும் contact lens வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கணணியை இயக்கி எந்தத் தகவலை வேண்டுமானாலும் திரட்டிவிடலாம். சிலர் எப்பொழுதும் மடிக்கணணியை சுமந்து கொண்டே சென்று கொண்டிருப்பார்கள். அந்த சுமையையும் குறைக்க உங்கள் கண்களில் contact lens பொருத்தி அதன் மூலம் இணைய இணைப்பை வழங்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள contact lensல் இணைக்கப்படும் antenna வெளியிலிருந்து வரும் தகவல்களைத் திரட்டித் தருகிறது. சிப்பில் பதிவாகும் அந்தத் தகவல்கள் மெல்லிய LED திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த வசதியின் மூலம் மின்னஞ்சல் உள்ளிட்ட பல தகவல்களைப் படிக்கலாம். இந்த contact lens ஒருவருக்குப் பொருத்தி வெற்றிகரமாக இயக்கிக் காட்டியுள்ள விஞ்ஞானிகள் இதனால் கண்ணுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். எனினும் கண்களுக்கு மிக அருகில் இருப்பதால் வாசகங்களைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. இப்பிரச்னையை சரிசெய்ய தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

You might also like

Comments are closed.