இந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு!

1,107

 572 total views

பிட்காயின் எனப்படும் குறியீடாக்க பணம்வர்த்தகத்தில்   (Indian  CryptoCurrency Exchange )  ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த நிறுவனம் CoinSecure தனது நிறுவனத்தின் பிட்காயின் பெட்டகத்தில் இருந்த 438.318 BTC  பிட்காயின்கள் கொள்ளை போய்விட்டதாகவும், தானே திருடிவிட்டு கொள்ளை நடந்துவிட்டதாக  தனது நிறுவனத்தின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி (CSO) முனைவர். அமிதாப் சாக்சனா பொய் சொல்வதாகவும். இதை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு டில்லி காவல்துறைக்கு இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (CEO) புகார் தெரிவித்துள்ளார்.
இந்த இணைய தளம் பிட்காயின் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது,
  • ரூபாய் பணத்தை செலுத்தி பிட்காயின் குறியீடு பணத்தை வாங்குதல்
  • பிட்காயின் பணத்தை செலுத்தி ரூபாய்க்கு விற்பனை செய்தல்
ஆகிய இரண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.,
பிட்காயினை விற்க நினைப்பவர்கள்  தங்களின் சொந்த பிட்காயின் பணத்தை முதலில் CoinSecure இணைய தளத்தின் பிட்காயின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதே போல பிட்காயின் வாங்க நினைப்பவர்கள் தங்களின் வாங்கி கணக்கில் இருந்து ருபாய் பணத்தை CoinSecure வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும்.
வாங்கிய நபரின் கணக்கில் உள்ள ரூபாயை பிட்காயின் அனுப்பிய நபரின் வங்கிக்கு அனுப்பும் “பரிமாற்ற” வேலையை இந்த இணைய தளம் செய்யும்.
இவ்வாறு பொதுமக்கள் விற்பனைக்காக அனுப்பிய பிட்காயின் பணத்தை ஒரே முகவரியில் சேமித்து வைக்க மாட்டார்கள்.  பாதுகாப்பு காரணங்களுக்காக பல முகவரிகளில் வைப்பார்கள். இதன் Private Key பொதுவாக மிக உயர் அதிகாரிகளிடம் இருக்கும்.  இதை யாரும் Hack செய்ய முடியாது , யார் வசம் உள்ளதோ அவரே திருடலாம் அல்லது அவர் private key யை தொலைத்து விட்டு பணம் பறி போகலாம்.
இதனால் இந்தியாவில் உள்ள பிட்காயின் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

You might also like

Comments are closed.