2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.

இன்போஸிஸ் நிறுவனம் இந்த ஆண்டு தமது BPO பிரிவுகலுக்காக சுமார் 8000  புதிய ஆட்களை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் இருபது சதவீதம் பேர் இடைநிலை மற்றும் மேல்நிலை பணியிடங்களில் வேலை செய்வர்.

மேலும் அவர்கள் தெரிவித்துள்ளதாவது.,

“வரும் நிதியாண்டு 2013இல் 10000 முதல் 12000 புதிய பணியாளர்களை எடுக்க இருக்கிறோம். இதில் 4000 பேர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். ”

இன்போஸிஸ் BPO பிரிவின் முதன்மை செயல் அலுவலர் (CEO)  சுவாமி சுவாமிநாதன் அவர்கள் NASSCOM BPO Strategy Summit 2012 நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இதன் BPO பிரிவில் மட்டும் சுமார் 24000 பேர் வேலை செய்கிறார்கள். கடந்த April-June காலாண்டு மட்டும் 109 மில்லியன் டாலர் வருமானமும் 16 மில்லியன் டாலர் லாபமும் ஈட்டியுள்ளது BPO பிரிவு.

தமது BPO பிரிவை Legal Process Outsourcing (LPO) & Human Resource Outsourcing (HPO) ஆகிய புதிய தளங்களிலும் விரிவாக்கம் செய்ய ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply