ஜிமெயிலில் இருபத்திதைந்தாயிரம் முகவரிகள்(Contacts) வரை சேமிக்க

1,051

 2,199 total views

ஜிமெயில் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு முக்கிய காரணமே, மற்ற மின்னஞ்சல் சேவைகளைக் காட்டிலும் இதிலுள்ள அதிகப்படியான வசதிகளும், புதிதுபுதிதாக பல வசதிகளை வழங்கிவரும் கூகுளின் சேவையுமே ஆகும்.

ஜிமெயிலை அனைவரும் ஒரே விதத்தில் பயன்படுத்துவதில்லை.நமது  ஜிமெயில்  அக்க்கவுண்ட்  வழியாகவே நமது முகவரி, மொபைல் எண், பெர்சனல் தகவல்களை நம்மால் சேமிக்க  முடியும் என்பது அனைவரும் அறிந்ததே . தற்ப்போது  வசதிகள் மேம்பதப்பட்டுள்ளது

 

தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம்.

முன்பு ஒரு தனி முகவரியின் அளவு 32KB தான் இருக்க வேண்டும் இது பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இந்த அளவு போத வில்லை.
இதை கருத்தில் கொண்டு ஒரு தனி முகவரியின் அளவை 128KB அளவாக உயர்த்தி உள்ளது.  ஆகவே அனைவரும் ஜிமெயிலின் இந்த அறிய வசதிகளை அறிந்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 

மெயில் முகவரியை நாமே அறியாமலேயே டெலிட் செய்திருப்போம். அல்லது வேறு செயல்பாட்டின் காரணத்தால்  ஈ-மெயில் முகவரிகள்  டெலிட் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட ஈ-மெயில் முகவரிகளை மீட்டெடுக்க முடியும்.
 
முதலில் உங்களுடைய ஈ-மெயில் முகவரிக்குள் நுழைந்து கொள்ளவும், பின் Contacts என்பதை தேர்வு செய்து More Actions என்னும் பட்டியை தேர்வு செய்து அதில் Restore Contacts என்பதை தேர்வு செய்து எத்தனை நாள் என்பதை குறிப்பிட்டுவிட்டு, இழந்த Contact-களை ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.
அதிகபட்சமாக ஒருமாதத்திற்கு உள்ளாக டெலிட் செய்த முகவரிகளை மட்டுமே மீட்டெடுக்க முடியும். அந்த குறிப்பிட்ட நாளில் உங்களுடைய ஈ-மெயில் முகவரியில் இருந்த Contact-ள் மட்டுமே ரீஸ்டோர் செய்த பின்பு இருக்கும். மற்ற முகவரிகள் இருக்காது, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

You might also like

Comments are closed.