கூகுள் குரோம் – பயனுள்ள PRINT PREVIEW வசதி – V13

707

 1,335 total views

தற்போதைய நிலவரப்படி இணையத்தில் அதிகமான வாசகர்களால் உபயோகப்படுத்தப்படும் உலவிகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதற்க்கு முன்னர் இந்த இடத்தில் இருந்த பயர்பாக்ஸ் உலவியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டு அந்த இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் தொடர்ந்து IE உலவி உள்ளது. வெளியிட்ட சில வருடங்களிலேயே இந்த இமாலய இடத்தை அடைய முக்கிய காரணம் இதன் எளிமையோடு கூடிய வேகமும் ஆகும். மற்றும் உலவியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அடிக்கடி அதன் அடுத்த பதிப்பை வெளியிட்டு வாசகர்களை கவர்ந்ததும் ஒரு முக்கிய காரணமாகும்.

இந்த வகையில் இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர். இனி நாம் இணையத்தில் ஏதாவது பிரிண்ட் எடுத்தால் அதன் PRINT PREVIEW பார்த்து கொள்ளலாம். இதனால் அனைத்து பக்கங்களையும் பிரிண்ட் எடுத்து நமக்கு தேவையானதை தேடி எடுத்து கொள்ளாமல் குறிப்பிட்ட நமக்கு தேவையான பகுதியை மட்டும் PRINT எடுத்துக்கொள்ளலாம்.
  • உதாரணமாக நீங்கள் PRINT எடுக்க போகும் இணைய பக்கத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கீபோர்டில் CTRL+P அழுத்துங்கள். இல்லையேல் SETTINGS – PRINT சென்றும் கொடுக்கலாம்.
  • உங்களுக்கு இப்பொழுது ஒரு புதிய டேப்(TAB) திறக்கும். அதில் கீழே இருப்பதை போல பக்கம் வரும்.
  • இடது பக்கத்தில் PRINT சம்பந்தமான வசதிகளும் வலது பக்கத்தில் PRINT PREVIEW வந்திருக்கும்.
  • இதில் உங்களுக்கு தேவையான பக்கத்தை மட்டும் தேர்வு செய்து கொடுக்க PAGES பகுதியில் ALL என்பதற்கு பதில் அந்த குறிப்பிட்ட பக்க எண்ணை மட்டும் கொடுத்து PRINT எடுத்துகொள்ளலாம்.
CTRL+P  கொடுத்தால் மேலே உள்ளதை போல வரவில்லை எனில் நீங்கள் உங்கள் உலவியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இந்த லிங்கில் Google Chrome 13 சென்று குரோம் உலவியை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

You might also like

Comments are closed.