வேலை தேடுபவர்களுக்கு உதவும் தளம்

வேலை தேடுபவர்களின் முதல் வேலை bio-data. அதன் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். Bio-data பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அதனை தயாரிப்பது எப்படி என்பது தான். Bio-data விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாகப் புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக bio-dataவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை. அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சேர்த்துக் கொண்டால் bio-data போல இருக்காது.

பக்காவான, செயல்திறன் மிக்க bio-dataவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து. அதையும் சுலபமாக, உடனடியாக செய்து தருகிறது.இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல bio-data எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ, குழப்பமோ தேவையில்லை. அதை இந்த தளம் பார்த்துக் கொள்கிறது. வேலை தேடுபவரின் நோக்கம், கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதைக்
கொண்டு அழகான bio-data readyயாகி விடுகிற‌து.  நாலைந்து வகையான பொதுவான templateகள் bio-dataவுக்கு இருக்கின்ற‌ன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.  துறைவாரியாக சம்பிக்கப்பட்ட bio-dataக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன. அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன. பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன. PDF கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம். இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். Bio-dataக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும். பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து. வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை. தள முகவரி http://www.resumebaking.com/

Leave a Reply