மிலேக்ரோ டேப்லட் – தமிழ் மொழிக்கு !

439

 1,112 total views

சமீபத்தில் க்யூப்பா கே-11 என்ற புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்த மிலேக்ரோ நிறுவனம், தற்பொழுது இன்னும் ஒரு புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது. டேப்டாப்-10.4 என்ற பெயர் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது மிலேக்ரோ நிறுவனம். இந்த டேப்லட்டின் திரை கூடுதல் ஸ்பெஷல் கொண்டதாக இருக்கும். வெளியில் உள்ள வெளிச்சத்திற்கு தகுந்த வகையில் இதன் திரையில் வெளிச்சம் அட்டோமெட்டிக்காக அட்ஜஸ்ட் செய்யப்படும். இது இந்த டேப்லட்டில் ஒரு சிறப்பான தொழில் நுட்பம் என்று கூறலாம். இந்த டேப்லட், பொதுவாக வாடிக்கையாளர்கள் விரும்பும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இந்த டேப்லட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் வசதியினை கொண்டதாக இருக்கும். ஆட்டோமெட்டிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட இந்த டேப்லட் திரை 9.7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதன் பிராசஸர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு இயங்கும். ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் இதன் இயங்குதளத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். 1024 X 780 திரை துல்லியத்தினை வழங்கும். முகப்பு கேமரா மட்டும் அல்லாமல், இதில் 2 மெகா பிக்ஸல் கேமாரவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டேப்லட் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளுக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதில் 8,000 எம்ஏஎச் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 12 மணி நேரம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். இதில் 16 ஜிபி வரை மெமரி வசதியினை கொண்ட, டேப்லட்டில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த டேப்டாப் டேப்லட் ரூ. 22,999 விலை கொண்டதாக இருக்கும்.

You might also like

Comments are closed.