நோக்கியா தொடுக்கும் வழக்குகளைச் சமாளிக்குமா ஆப்பிள்?

ஐ-போன், ஐ-பாட், ஐ-பேட் போன்ற பிரபலமான தயாரிப்புகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் மிகவும் சிக்கலான வழக்குகளில் சிக்கியுள்ளது.

செல்லிடப்பேசி தொழில்நுட்பத்தில் பேரராசாக( நமது Director பேரரசு அல்ல) விளங்கும் நோக்கியா நிறுவனம், தான் ஏற்கனவே காப்புரிமை பெற்ற 5 தொழில் நுட்பங்களை ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் மற்றும் ஐ-பேட் கருவிகளில் பயன்படுத்தி இருப்பதாக ஒரு புகார் 2009ம் ஆண்டிலேயே வந்தது.

GSM, UMTS & WiFi தொடர்பாக 2009இல் நோக்கியாவால் தொடுத்த வழக்கு இன்னும் முடியாத நிலையில், புதிதாக பேச்சு, தரவு செலுத்தாக்கம், புவி இடத் தரவுகளை கையாளும் திறன் மற்றும் அலை வாங்கி செயல்த்திறன் மேம்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களில் சிறிய கருவிகளில் பயன்படுத்தும் முறைகள் தங்களது காப்புரிமையை மீறி ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி இருப்பதாக தொடுக்கப்பட்ட இந்தப் புதிய வழக்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது இந்த வழக்கு அமெரிக்காவில் இருக்கும் விஸ்‌கந்ஸிந்(Wisconsin) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பரபரப்பாக விற்பனை ஆகும் கருவிகளில் இருக்கும் தொழில்நுட்பம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளத்தால், இவ்வழக்கு தொழில்நுட்ப ஆர்வலர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply