கூகுள் தினமும் 10,000 மேற்பட்ட மலிகுலஸ் வெப்சைட்டுகளை கண்டறிந்து பின் நீக்குகிறது

இணையத்தில் நாம் தினமும் நூற்றுக்கணக்கான தளங்களை பார்த்து வருகின்றோம் .அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 10,000 தேவையில்லாத புதிய வெப்சைட்டுகளைக் கண்டுபிடிப்பதாக தனது ஆன்டி-மால்வேர் இனிசியேட்டிவில் கூகுள் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் இணையதளத்தை பயன்படுத்துவோர் இந்த வெப்சைட்டுகளைப் பற்றி கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையும் செய்கிறது.

உலக அளவில் 600 மில்லியனுக்கும் அதிகமானோர் க்ரோ்ம, பயர்பாக்ஸ், சபாரி போன்ற பல ப்ராவ்சர்கள் மூலம் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று கூகுள் கூறுகிறது. அவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தும் போது ஏதாவது தேவையில்லாத வெப்சைட்டுக்குள் நுழைந்தால் உடனே திரையில் எச்சரிக்கை வாக்கியங்களை வெளியிடுவதாக கூகுள் கூறுகிறது. அதன் மூலம் பயனாளர்கள் பத்திரமாக இருக்க முடியும் என்று கூகுள் நம்புகிறது.

Related Posts

Leave a Reply