கணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor

1,137

 2,352 total views

[நடுவினில் இருப்பவர் தான் 15 வயதே நிரம்பிய  Jack Andraka]

International Science and Engineering ஒவ்வொரு வருடமும் சிறந்த மேல் நிலை பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை அளித்து வருகின்றது. இந்த வருடம் 15 வயதே நிரம்பிய  Jack Andraka-க்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர் Pancreatic Cancer-ஐ  (கணையம்) கண்டுபிடிக்கும் Paper Sensor ஒன்றை கண்டுபிடித்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் சாதனத்தை விட இந்த முறையில் Pancreatic Cancer-ஐ வேகமாகவும், குறைந்த பொருட்செலவிலும் சதவிகிதம் துல்லியமாகவும் கண்டுபிடிக்க முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

Jack Andraka தனது ஆராய்ச்சி பற்றி தெரிவிக்கையில் தனது நண்பனின் சகோதரன் இந்த வியாதியால் மரணம் அடைந்ததால் இது பற்றி ஆராய்ந்தேன் என்று தெரிவித்தார்.

Paper Strip முறையில் ரத்தம் அல்லது சிறுநீரை பரிசோதனை செய்து அதில் புரதச் சத்து [Protein] எவ்வளவு உள்ளது என்பதனை வைத்து கண்டுபிடிக்க முடியும். இந்த விருதின் மூலம் Jack Andraka-க்கு 75,000 American Dollars பரிசாக கிடைத்துள்ளது.

You might also like

Comments are closed.