Latest Technology, Science & IT Industry News in Tamil

இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள்

0 30

2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. Online-ல் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும்.

1. http://www.amazon.com/

இந்த தளம் Online-ல் பொருட்களை வாங்க உதவும் தளமாகும். கூகுளிடம் ஒப்பிடுகையில் இந்த தளத்தின் வாசகர் வரத்து குறைவு தான். ஆனால் பொருட்களை வாங்க மொத்த சந்தையாக இந்த தளம் உள்ளதால் தான் கூகுளை காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறது.

2. Google

இந்த தளத்திற்க்கு அறிமுகம் தேவையில்லை. இணையத்தின் நாடித்துடிப்பு இந்த தளம். ஒரு நாளைக்கு இதன் சேவை நிறுத்தப்பட்டால் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள். கூகுளின் ஒரு வருடத்திற்கு வருமானம் $23,650,560,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $749.46 ஆகும். இந்திய மதிப்பில் சுமார்  39,000/- ரூபாய் ஆகும்.

 

3. http://www.comcast.com/default.cspx

இந்த தளத்தின் ஆண்டு வருமானம் $8,727,360,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு 276.56$ சம்பாதிக்கிறது.

4. http://www.ebay.com/

Amazon தளத்தைப் போன்று இதுவும் Online-ல் பொருட்களை வாங்க உதவும் இணையதளமாகும். இந்த தளம்  வினாடிக்கு 276.56$ ஆண்டிற்கு $8,727,360,000 சம்பாதிக்கிறது.

5.  Yahoo

இந்த தளத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இணையத்தில் மிகப்பிரபலமான தளமாகும். News, Search, mail என பல்வேறு வசதிகளை கொண்டது. இதனுடைய ஆண்டு வருமானம் $6,460,000,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $204.71 ஆகும்.

6. http://www.reuters.com/

Online-ல் செய்தி பகிரும் தளமாகும். வினாடிக்கு 107$ வருமானமும் ஆண்டிற்கு $ 3,400,000,000 வருமானமும் பெற்றுத் தருகிறது.

7. http://www.aol.com/

பல்வேறு தலைப்புகளில் latest செய்திகளை பகிரும் தளமாகும். இந்த தளம் வினாடிக்கு 99.41$ ஆண்டிற்கு $3,137,100,000 வருமானமும் தளத்தின் உரிமையாளருக்கு பெற்று தருகிறது.

8. http://www.expedia.com/

பயணம் செய்பவர்களுக்கு பயனுள்ள தளமாகும். டிக்கெட்டுகள் வாங்குவதில் இருந்து விமானங்களின் நேரங்கள் மற்றும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த தளம் வருடத்திற்கு $2,937,010,000 வருமானம் பெற்று தருகிறது. இந்த தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் $93.07 ஆகும்.

9. https://www.paypal.com/cy

Online-ல் பணம் பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும். உலகம் முழுவதும் பணம் பணம் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள இணையதளமாகும். இந்த தளம் வினாடிக்கு 91.90$ ஆண்டிற்கு $2,900,000,000 சம்பாதிக்கிறது.

10. http://www.apple.com/itunes/

ஆப்பிள் நிறுவனத்தின் iTunes இணையதளமாகும். பத்தாவது இடம் என்றவுடன் சாதாரணமா நினைச்சிடாதிங்க இந்த தளம் ஒரு வினாடிக்கான வருமானம் 60.21$  ஆண்டிற்கு $1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் வருகிறது.

 

Related Posts

You might also like

Leave A Reply