ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்- ன் முதலாமாண்டு நினைவு தினம் அக்டோபர் மாதம் 5ம் தேதி அனுசரிக்கப்பட்டது

907

 2,065 total views

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – “Bite into an Apple”  என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் “Think Different” என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது.

ஸ்டீவ் ‌ஜாப்ஸ்(56)  கடந்த ஆண்டு  புற்று‌நோயால் அவதிப்பட்டு வந்த அவர் நியூயோர்க் நகரில் மரணமடைந்தார்.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் கடந்த 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிறந்தார் ஸ்டீவன்பவுல் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் இன்ஜினியராக தனது வாழ்க்கையை துவக்கினார். 300-க்கும் மேற்பட்ட தனது எலெக்ட்ரானிக் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுள்ளார்.

ஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்து பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ் இதன்பின்னர் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர். கடந்த 1977-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு ஜனவரி 27-ம் ஆண்டு முதன்முதலாக ஐ-பேடினை அறிமுகம் செய்து நவீன கணினி உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.

ஆப்பிள் நிறுவனத்தை துவங்கி இந்த உலகிற்கு மகத்தான சேவை செய்து நம்‌மை விட்டு பிரிந்து விட்டார். மனித வரலாற்றில் அரிய சாதனை ப‌டைத்துள்ளார். மிகவும் அசாதாரணமான ஒரு மனிதரை இந்த உலகம் இழந்துவிட்டது என்றார்.

அவரை பெருமை படுத்தும் வகையில்  அக்டோபர் மாதம் 16 ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் தினமாக கலிபோர்னியா கவர்னரால் அறிவிக்கப்பட்டது.

You might also like

Comments are closed.