நம்ப முடியாத அளவிற்கு சுத்தம் செய்யும் குழாய் தண்ணீர் :

நாம் வழக்கமாக நமது கைகளைக் கழுவதற்கு என்ன செய்வோம்? பல இரசாயணம் கலந்த திரவங்களை பயன்படுத்தி கைகளை கழுவுவோம் அல்லது குறைந்தபட்சம் வெறும் நீரினை மட்டுமே கொண்டு கைகளைக் கழுவுவோம் .தற்போது ஸ்டார் ஸ்ட்ரீம் குழுவினர் தயாரித்துள்ள சிறிய சாதனத்தின் மூலம் ஒரு நாசில்லைக் கொண்டு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர் கிருமிகள் மற்றும் மாசுக்களை நீக்கி நீரினை சுத்தம் செய்து தருகிறது. இந்த சாதனம் அல்ட்ரா சோனிக் மீயொலிகளையும் நீர்க் குமிழிகளையும் கொண்டு நீரினை சுத்தம் செய்கிறது.

ஸ்டார் ஸ்ட்ரீம் தற்போது இந்த சுத்தம் செய்யும் கருவியை அறுவை சிகிச்சையில் அறுவை சிகிச்சை செய்த உபகரணங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தி வருகினர் . மேலும் அதில் கலந்துள்ள மாசுக்களையும் நீக்கி வருகிறது .

starstream-640x640
இதனால் மற்ற டிடர்ஜெண்டுகள் அல்லது இரசாயனக் கலவைகளை மறந்து விட்டு இந்த ஸ்டார் ஸ்ட்ரீமின் தயாரிப்பை அணுகலாம்.இந்த சாதனத்தில் நாசிலின் உள்ளே உள்ள மீயொலி அலைகளில் நீரானது குமிழ் குமிழாக மாறி அவை வெளியே வரும் போது நீரானது ஒரு சிறிய அழுக்கு நீக்கி போன்ற தேய்ப்பானாக மாறி சுற்றியுள்ள தளத்தில் காணப்படும் கீறல்களையும் , பிளவுகளையும் நீக்கக் கூடியது . இதனால் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகள் கூட நம் உடலை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம் .இதனால் நுண் கிருமிகளால் ஏற்படும் நோய்களும் நீரினால் பரவக்கூடிய நோய்களும் வராமல் தடுக்கலாம்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்  என்ற பழமொழியை உணர்த்தும் வகையில்  வரும் காலத்தில் இந்த ஸ்டார் ஸ்ட்ரீமின் தயாரிப்புகள் எல்லா மருத்துவமனைகளிலும் ஏன் குளியலறைகளிலும் தினசரி பயன்படுத்தப்படலாம் .

Leave a Reply