காகிதம் கொண்டு மின் ஆற்றலை சேமிக்கலாம் :-

534

 725 total views

ஆற்றலை   சேமித்து  வைக்க  உதவும் மூலங்களான  சூரியன் , காற்று போன்றவற்றை நம்பினால் இரவில் சூரிய சக்தியை தேக்கி வைக்க முடியாமலும் மற்றும்  காற்று சில நேரங்களில்  வீசாமல் ஏமாற்றி விடுகிறது. இதுபோன்ற சிக்கல்களுக்காக சுவீடன் நாட்டைச் சேர்ந்த    ஸிங்கோபிங் பல்கலைகழகத்தினர், பிளாஸ்டிக்   காகிதத்தின் உதவியுடன் மின்சக்தியை சேமித்து வைக்கும் “பவர் பேப்பர் ” என்ற நுட்பத்தினை கண்டறிந்துள்ளனர்.

power-paper-linkoping-2-889x556பவர் பேப்பரின்  சிறப்பம்சங்கள் :
பவர் பேப்பரில்  புதுப்பிக்கத்தக்க செல்லுலோஸ் மற்றும் எளிதாக கிடைக்க பாலிமர் போன்றவைகள் அடங்கியுள்ளது.15சென்டிமீட்டர்  விட்டம் மற்றும்  ஒரு சில மில்லிமீட்டர் தடிமனையும் , மிக இலேசான எடையும்   கொண்ட இந்த காகிதம் சந்தையில் தற்போது கிடைக்கும் மின்தேக்கிகளை விட பன்மடங்கு சிறந்ததது. சந்தையில் காணப்படும் அதிநவீன  மின்தேக்கிகளைப்(Super Capacitor ) போன்றே   1F சக்தியை தேக்கி வைக்கும் திறன் வாய்ந்தது. கூடவே நீர் புகாத  யுக்தியையும் , எந்தவித  பாதிப்பை  விளைவிக்காத  இரசாயன கலவைகளின்றி தயாரிக்கப்பட்டுள்ளது .பவர் பேப்பர் தற்போது    நான்கு உலக சாதனையையும் நிகத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதே . இந்த  சோதனையில் பவர் பேப்பர்  வெற்றி  கண்டால் எதிர்காலத்தில் அனைத்து இடங்களிலும் நாம் பவர் பேப்பரைக் காணும் சாத்தியமுண்டு .

You might also like

Comments are closed.