இன்ஸ்டாகிராமின் புதுவகையான பூமரிங் வீடியோ பயன்பாடு

469

 725 total views

                                                இது ஒரு கிப் வீடியோவோ அல்லது புகைப்படமோ அல்ல. இது ஒரு பூமரிங் . பூமரிங் என்ற வார்த்தைக்கு முந்தைய நிலைக்கு திரும்புதல் என்று பொருள். இதனால் மிக சுவாரஸ்யமான நொடிகளை இந்தக் கருவியை கொண்டு நகைச்சுவையாகவும் யாரும் எதிர்பாராத விதமாகவும் மாற்றி மகிழலாம்.இன்ஸ்டாகிராம் தற்போது பூமரிங் பயன்பாட்டினை   அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒரு வினாடியில் எடுக்கப்படும் வீடியோவை அல்லது ஐந்து போட்டோக்களையோ ஒரு ஒலியில்லா வீ டியோ காட்சியாக மாற்றி முன்னோக்கியும் மற்றும் பின்னோக்கியும் தரக்கூடியது.பூமரிங் தானாகவே உங்கள் கேமராவின் ரோலில் வீடியோக்களை எடுத்து எளிதில் முகநூல் இன்ஸ்டாகிராம் அல்லது எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு திறம் வாய்ந்தது. இதற்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

boomerang-food-gif
பூமரிங் என்பது இன்ஸ்டாகிராமின் தனிப்பட்ட முதல் பயன்பாடல்ல.        இதற்கு முன் அதன் உறுதிபடுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஹைபர்லேப்ஸ் மற்றும் லே அவுட் போன்ற புகைப்பட அம்சத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கதே.
பூமரிங் பயன்பாடானது தற்போது டுவிட்டரின் 6 வினாடி வீடியோ மற்றும் ஆப்பிளின் லைவ் புகைப்படங்கள் போன்ற பயன்பாடுகளை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.
இந்த புதிய கருவி இன்ஸ்டாகிராம்மை மேலும் பல விதமான முன்னனணி அம்சங்களுடன் போட்டிபோட முனைவை ஏற்படுத்தும் .இதனால் நாம் நம் நண்பருடன் எடுத்துக் கொண்ட வீடியோக்களை நகைச்சுவையாகவும் மேலும் சுவாரஸ்யமாகவும் எப்போதும் கண்டு ரசிக்கலாம்.

நிச்சயமாக இதனால் இன்ஸ்டாகிராம் பயனர்களை ஒரு புகைப்படங்களை பகிரும் மேடையில்  கற்பனை ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும். ஹைப்பர் லேப்ஸ் மற்றும் லே அவுட்டை தொடர்ந்து தற்போது பூமரிங் ios மற்றும் அன்றாய்டில்ஒரு நிமிட வீடியோ காட்சியை காணலாம்.

boomerang-selfie
இதில் பயனர்களுக்கு இரண்டு பட்டன்கள் வழங்கப்படும். ஒன்று புகைப்படத்தை எடுக்கவும் மற்றொன்று முன் அல்லது பின் காமிராவிற்கும். இந்த வீடியோவை எடுத்து முடித்த பின் பயனர்களுக்கு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரும் வாய்ப்புகளும் வழங்கப்படும்.
முகநூல் இன்ஸ்டாகிராமை 2012இல்  1பில்லியன் டாலருக்கு வழங்கியது. தற்போது நாள் ஒன்றுக்கு இந்த புகைப்பட பயன்பாட்டில் 400 மில்லியன் பயனர்களும் 80மில்லியன் போட்டோக்களும் பகிரப்படுகின்றன. தற்போது விளம்பரதாரருக்கு பிரசாதமாக ஒரு சக்தி வாய்ந்த அம்சத்தை வழங்க உள்ளது.தற்போதைய இணையதள ஆராய்ச்சியின்படி இன்ஸ்டாகிராமின் விளம்பரதாரர் வருவாய் 2016இல் 1.5 பில்லியன் டாலரும் 2017 இல் 2.8 பில்லியனும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.  மேலும் இந்த வருடம் மிண்ணனு வணிக ஆராய்ச்சியாளரின் கருத்து படி இன்ஸ்டாகிராம் உலகளாவிய விளம்பர வருவாயை $600 மில்லியன் வரும் என கணித்துள்ளனர்.

You might also like
1 Comment
  1. Nagendra Bharathi says

    அருமை

Comments are closed.