இண்டர்நெட் இல்லாத போதும் கூட கூகுள் வரைபடத்தை அணுகலாம் :

எவ்வளவு தான் புது புது பயன்பாடுகள் வந்தாலும் அவையனைத்தும் இணையத்தின் உதவி இல்லாமல் இயங்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே! . இவ்வுலகில் இன்றும் 60 சதவிகித மக்கள் இணையத்தோடு தொடர்பில்லாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எங்கு இணையம் கிடைத்தாலும் அங்கு மட்டுமே தேட தொடங்குகின்றனர்.அப்படியானால் மக்கள் பலர் இன்னும் உடனடியாக நினைத்ததுமே இணையத்தை அணுக முடியாத ஒரு நிலையில் உள்ளனர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது .

drew-how-it-worksஇது பெரும்பான்மை மக்களிடையே காணப்படும் தீர்க்கப்பட முடியாத பிரச்சனையே! இதனை தீர்த்து வைக்கும் வகையில் கூகுள் ஒரு படி முன்னெடுத்து வைத்துள்ளது. உலகளாவிய திசைகளை கண்டறியும் விதமாக கூகுளின் வரைபட பயன்பாட்டை இணையமில்லாமலும் பயனர்கள் அணுக வழி செய்துள்ளது .

தற்போது நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அந்த பகுதியை பற்றிய தகவலை கூகுள் திசைகாட்டியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . அடுத்த முறை அதனை இணையத்தின் உதவி இல்லாமலே பார்த்துக் கொள்ளலாம்.

screen-shot-2015-11-10-at-5-42-03-amநீங்கள் உங்கள் பகுதியையோ , நகரத்தையோ அல்லது வசிக்கும் நாட்டினையோ பதிவிறக்கம் செய்துவிட்டால் கூகுள் அந்த பகுதியை பற்றிய தகவல்களை பெறலாம் . பின் எங்கு வை-பை இணைப்பு கிடைத்தால் அந்த பகுதியினுடைய தற்போதைய நிலைகளும் போக்குவரத்து நடவடிக்கைகளும் பற்றிய அனைத்து தகவல்களையும் பெறலாம். உங்களுக்கு வை-பை இணைப்பு கிடைக்கும்போது இயல்பாகவே நீங்கள் உங்கள் பகுதியினை பற்றிய தகவல்களை பதிவிறக்க முடியும் .தற்போது இந்த பயன்பாடு கூகுளின் அன்றாய்டில் களமிறக்கியுள்ளது. ios போன்களில் வெளியிடுவதை பற்றிய எந்த அறிவிப்பையும் அறிவிக்கப்படவில்லை.இதனால் நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் ஆபத்துகால சமயங்களிலும் கூட நாம் வழியை எளிதாகப் பெற முடியும்.

Related Posts

Leave a Reply