வை​​-பை விட 100 மடங்கு அதிவேகமான சேவையைப் பெற லை-பை(Li-fi) :

1,654

 2,215 total views

லை-பை  தொழில்நுட்பம் முதலில்  2011 ல்  எடின்பர்க் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் என்பவரால்  கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது லை-பையின் உதவி கொண்டு  கிடைக்கும் இணையத்தின்  வேகமானது நாம் இன்று பயன்படுத்தும்  வை-பையின்  வேகத்தினை விட 100 மடங்கு அதி வேகமாக  உள்ளதை அறிவியல் அறிஞர்கள்  ஆராய்ச்சியின் மூலம் நிருபித்துள்ளனர். இதனால்  நொடிக்கு 224GB   வேகத்தினைக் கொடுக்கக் கூடியது. லை-பை அல்லது லைட் பிடிலிட்டி என்று சொல்லப்படுகின்ற ஒளி  விசுவாசத்தினைக் கொண்டு  கண் இமைப்பதற்குள்  18 திரைப்படங்களை ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய  அளவிற்கு பன்மடங்கு  அதிவேகமானது. தற்போது இதனை உலகில் சில இடங்களில் சோதனை முன்னோட்டம் பார்ப்பதற்காக  உலவ  விட்டுள்ளனர்.  FI2ypg9

இதில் முக்கியமான  விஷயம் என்னவென்றால் லை-பையில் பரப்பப்படும் ஒளி அலைகள்  வை-பையின் ரேடியோ அலைகளை  விட 10,000 மடங்கு அதிக வேகமானது .இதிலிருந்து லை-பைக்கு  கூடுதல் செயல்  திறன்  உள்ளது தெரிய வருகிறது.லை-பை யை அனைத்து அலுவலகங்களிலும் வீட்டிலும்  பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அதிவேக  திறன் கொண்ட  லை-பையினை  இன்னும் நான்கு அல்லது  ஐந்து வருடங்களில்    அறிமுகபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அனைத்து அமைப்புகளையும்  LED பல்புகளைக்  கொண்டே செயல்படுத்த உள்ளனர்.   லை-பையை  வரும்காலத்தில்  வீட்டு உபகரண சாதனங்களிலும்  பயன்படுத்த வாய்ப்புள்ளது.ஏனெனில் ஒரு பக்கம் வீட்டின்  வெளிச்சத்திற்கு உதவும் LED பல்புகளும்  மறுபக்கம் மற்றொரு அறையிலே  தரவுகளின் மூலம் இணையத்தை அணுகிக் கொண்டும் இருக்கலாம்..!

 

You might also like

Comments are closed.