அலுவலகங்களில் காகித மறுசுழற்சி மையத்தை அமைக்க விரும்பும் எப்சான் :

பொதுவாக காகிதத்தை மறுசுழற்சி  செய்வதனை  நாம் கேள்விபட்டிறுப்போம். ஆனால் அவை எல்லாமே  பல நாட்கள் எடுத்துக்  கொள்ளும் ஒரு செயல் முறைகளே!  வழக்கத்திற்கு மாறாக  அதனை தவிர்த்து எப்சான் வழகியுள்ள காகித மறுசுழற்சி எந்திரத்தை  பயன்படுத்தி  மூன்றே நிமிடங்களில்   காகிதங்களை  மறுசுழற்சி செய்து கொள்ளலாம்.
2013-ல் சீனாவில் 110 மில்லியன்   டன்னுக்கும் மேலான காகிதங்களும் அமெரிக்காவில் 80,000 டன்களும் ஜப்பானில் 30,000 டன்களுக்கும்  அதிகமான காகிதங்களையும் உபயோகித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன .முக்கியமாக அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றில்  காகிதக்  கழிவுகளை அதிகம் உருவாக்குகின்றனர் . எப்சான் இதற்காக  அலுவலகங்களில் காகிதத்தை  மறு சுழற்சி  செய்யும் சாதனத்தை  உருவாக்கியுள்ளது.
இதனால் தேவையில்லாமல்  குப்பைத் தொட்டியில் போடும் காகிதங்களை   எப்சானின் காகித தொழிற்சாலையின் உதவியுடன் நாம்  உடனடியாக உபயோகிக்க கூடிய காகிதங்களாக  மூன்றே நிமிடங்களில்  மறுசுழற்சி செய்து  மாற்றிக்  கொள்ளலாம். இந்நிறுவனம் உலர் நார் தொழில்நுட்பத்தின் மூலம்  இந்த இயந்திரத்தை வெவ்வேறு வகை பிளேடுகளை பயன்படுத்தி காகிதங்களை விருப்பமான நிறம் மற்றும்  வெவ்வேறு   வடிவங்களில்  பெரும் நுட்பத்தை தருகிறது.  இந்த காகித  தொழிற்சாலையினை 2016ல் ஜப்பானிலும்   அறிமுகபடுத்திய    பின்னர் மற்ற பகுதிகளில்  துவக்க வேண்டும் என எண்ணியுள்ளனர்.

 
சரியாக சொல்லப்  போனால்  2016ல் அலுவலகங்களில் சாதரணமாக  இருக்கும் குடிநீர் மற்றும் தேநீர் இயந்திரங்களைப் போலவே  காகித மறுசுழற்சி இயந்திரங்களும்  காணப்படும் என நம்பலாம்.அதனால் அங்காங்கே  காகித குப்பைகளை போடாமல் அதனை மறு சுழற்சி செய்து  பயனடைவதோடு மட்டுமின்றி  தூய்மையான சமுதாயத்தையும் உருவாக்கலாம்.

Leave a Reply