Chrome-ல் Text to Speech மற்றும் Speech to Text வசதிகளை கொண்டுவர

891

 1,833 total views

Text to Speech என்பது எழுத்துக்களை ஒலி வடிவில் மாற்றி நமக்கு வழங்கும் தொழில்நுட்பமாகும். உதாரணமாக தினமும் பல்வேறு இணைய தள செய்திகளை நீங்கள் படிப்பவராக இருந்தால் இனி ஒவ்வொரு வார்த்தையையும் உங்கள் கண்களை உறுத்தி நீங்கள் பார்த்து படிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் படிக்க வேண்டிய பகுதியை select செய்து இந்த வசதியை கொடுத்தால் போதும் நீங்கள் படிக்க வேண்டியதை உங்கள் கணினியே படித்து காட்டும். Chrome உலவியில் அந்த வசதியை எப்படி கொண்டுவருவது என கீழே உள்ள வழிமுறையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வழிமுறை:

  • முதலில் https://chrome.google.com/webstore/detail/pgeolalilifpodheeocdmbhehgnkkbak இந்த link-ல் click செய்து Chrome நீட்சியை உங்கள் கணினியில் install செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது Chrome உலவியில் ஏதேனும் இணைய பக்கத்தை (தமிழில் வேலை செய்யாது) திறந்து கொண்டு நீங்கள் படிக்க விரும்பும் பகுதியை select செய்த பிறகு இந்த நீட்சியை click  செய்தால் போதும் நீங்கள் தேர்வு செய்த பகுதி ஆங்கிலத்தில் ஒரு பெண் குரலில் ஒலிப்பதை கேட்கலாம்.
  • இனி நீங்கள் ஒவ்வொன்றையும் படித்து தெரிந்து கொள்ளாமல் கண்களுக்கு அதிக வேலை இன்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
பேசும் வேகத்தை குறைக்க:
இந்த பேசும் வேகம் ஒரு நிமிடத்திற்கு 200 வார்த்தைகள் பேசும் படி அமைக்க பட்டிருக்கும். ஒருவேளை இதன் வேகம் அதிகமாக இருந்து உங்களால் கேட்பதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை எனில் இதன் வேகத்தை குறைப்பது எப்படி என பார்ப்போம்.
  • முதலில் இந்த நீட்சியில் right click செய்து Options என்பதை தேர்வு செய்யவும். உங்களுக்கு வரும் window-வில் Text to Speech engine என்ற இடத்தில் Skeak It என்பதற்கு பதில் native என்பதை தேர்வு செய்யவும்.
  • அடுத்து Speaking rate என்பதில் உள்ள அளவை குறைத்து கீழே படத்தில் உள்ளது போல வைத்து கொள்ளவும்.

  • இந்த பக்கத்தில் sound, Pitch ஆகியவையும் உங்களுக்கு தேவையான அளவில் தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Save என்ற பட்டனை அழுத்தி சேமித்து கொள்ளவும்.
Speech to Text :
இந்த நீட்சியில் பேசினாலே type செய்யும் தொழில்நுட்பமான Speech to Text வசதியும் உள்ளது. தேவை என்றால் tick mark கொடுத்து Enable செய்து கொள்ளுங்கள்.
  • இதன் படி நீங்கள் கணினியின் மைக்ரோபோனில் பேசினால்  வார்த்தைகள் type செய்யப்படும். உதாரணமாக பிளாக்கரில் பதிவு எழுத வேண்டுமென்றால் கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளது போல உள்ள icon click செய்து நீங்கள் பேச தொடங்குங்கள்.
  • நீங்கள் பேச பேச தானாக type செய்யப்படும்.

  • இந்த வசதியும் தமிழ் மொழியில் வேலை செய்யாது.

இந்த பயனுள்ள நீட்சியை உங்கள் உலவியிலும் இணைத்து பயன்பெறுங்கள்.

You might also like

Comments are closed.