குறைந்த விலையில் கிடைக்கும் டிஜிடல் கேமராக்கள்.

404

 1,426 total views

டிஜிடல் கேமராக்கள்  இன்று நாம் எல்லோரும் மிக எளிதாக பயன்படுத்த கூடிய கருவியாக உள்ளது. நாம் எல்லோருமே புகைப்பட கலைஞசராக மாறும் வாய்பாகவே  இது அமைந்துள்ளது. மேலும் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் இருக்கும் மகிழ்வான  தருணங்களை ஆவணப்படுத்தவும் இது  எளிதாக்கி விட்டது. அதில்  நாம்  வாங்கும் நிலையில் குறைந்த விலையில்  கிடைக்கும் கேம்ராக்களை நாம் பார்போம்

#1. Nikon Coolpix S3600


6000 ருபாயில் கிடைக்கும் இது 20 மெகாபிக்சல் கொண்டது இந்த விலையில்  இது  மிக  சிறந்ததாகும். 8x optical zoom 2.7 அங்குலம் திரை  கொண்டது. இதன் மின்கலம் 230 படங்கள்  எடுக்கும் வரைத்தாங்கும் சக்தி கொண்டது. தயாரிப்பாளர்  தரப்பில்  இருந்து ஒரு  வருட வாரண்டி  இதற்கு  கொடுக்கப்படுகிறது.

#2. Sony Cyber-shot DSC-W830


இதுவும்  20 மெகாபிக்சல் 8x optical zoom 2.7 அங்குலம் திரை  கொண்டது. ஆனால் இதன் மின்கலன் அளவு அதை விட குறைவாகும். 210 படங்கள்  எடுக்கும் வரைத்தாங்கும் சக்தி கொண்டது.  ஆனால்  அதனை விட  விலை  அதிகம். இதன் விலை 7000 இந்திய  ரூபாய். இதற்கு  இரண்டு  ஆண்டுகால வாரண்டி கொடுக்கப்படுகிறது.

#3. Nikon Coolpix S6700  

இதுவும் 20 மெகாபிக்சல்  லென்ஸை உடையது  ஆனால் இதன் திரை  3  அங்குலம் ஆகும். மேலும் இது 10x optical zoom வசதியுடையது.  இது  மற்ற இரண்டையும் விட விலை அதிகம் இதன் மதிப்பு  7500 இந்திய  ரூபாய்  ஆகும்.

#4. Nikon Coolpix S4400

இது 20.1 மெகாபிக்சல் லென்சை கொண்டதாகவும் 3  அங்குலம் திரைகொண்டதாகவும் அமைந்துள்ளது.ஆனால் 200 படங்கள் பிடிக்கும் அளவே மின்கலம் கொண்டுள்ளது. இது  இரண்டு  வருட வாரண்டியை கொண்டுள்ளது. இதன் விலை 7000 ரூபாய் ஆகும்.

#5. Canon PowerShot SX170 IS

ஒரு வேலை உங்கள் பட்ஜெட் பத்தாயிர ரூபாக்கு மேல்  என்றால் உங்களுக்கு மேலும் சிறந்ததாக இது  இருக்கும். இது 16 மெகாபிக்சலும். 16x optical zoom லென்சும் கொண்டதாக  அமைந்து  இருக்கும். மேலும் இதன் மின்கலமானது 300 புகைபடங்களை  எடுக்கும் வரை  தாங்கும்  தன்மையுடையது. Canon நிறுவனம் இதற்கு  ஒரு  வருட  வாரண்டியை  வழங்குகிறது.

You might also like
1 Comment
  1. Onlinety says

    This is Interesting. Wonderful Thanks..

    Web Development India

Comments are closed.