2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் :
சாதரணமாக கேமராக்களில் எடுக்கும் அனைத்து புகைப்படங்களும் தத்ரூபமாக இருப்பதில்லை. அவையனைத்தும் எடுக்கப்படும் இடம் நேரம் மற்றும் சில கால அளவுகளைப் பொறுத்தே சிறப்பாக அமையும். அதுவும் அதிக இடங்களையும் மக்களையும் ஒட்டு மொத்தமாக ஒரே புகைப்படத்தில் கொண்டு வரும் ட்ரோன் புகைப்படங்களை எடுப்பது என்பது கடினமே.ட்ரோன் புகைப்படங்கள் என்பது பறக்கும் விமானங்களின் உதவியுடன் பல தொலைவிற்கு அப்பால் இருந்து ஒரு பகுதியையோ அல்லது நகரத்தையோ முழுவதுமாக ஒரு புகைபடத்திற்குள் கொண்டு வருவதாகும். மேலும் இவற்றிற்கென வரையறுக்கப்பட்ட எல்லைகள் என எதுவும் இல்லை என்பதால் ஒரு புகைப்படமே பல அர்த்தங்களை உணர்த்தி விடும்.அத்தகைய அனைத்து அளவீடுகளும் சரியாக அமைந்த சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.