உங்கள் அனைத்து மின்னணு சாதனத்தையும் ஓரே நேரத்தில் சார்ஜ் செய்ய வேண்டுமா ?

412

 677 total views

என்னதான் அன்றாய்டு போன், ஸ்மார்ட் போன் என பல மொபைல் சாதனங்கள் வந்தாலும் அவற்றில் மின்திறன் (சார்ஜ் ) இல்லாவிட்டால் நம்மால் எந்த ஒரு அம்சத்தையும் அணுக முடியாது. முக்கியமான பல நேரங்களில் போனில் மின்திறன் குறைந்துள்ள செய்தியைக் கண்டாலோ அல்லது சார்ஜ் இல்லாமல் சாதனம் செயலிழந்து விட்டாலோ எரிச்சலாவதைக் காணலாம் .அதற்காகவே தற்போது ஆல்டாக் சார்ஜர்களை அறிமுகபடுத்தி உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 5 மின்சாதனங்களை சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதிகள் உள்ளன. இது ஒரு உலகளாவிய மின்திறனை சேமிக்கும் நிலையமாகவே உள்ளது. அதாவது ஒரே நேரத்தில் உங்களின் அணைத்து மின்னணு சாதனங்களையும் ஒரே நேரத்தில் சார்ஜ் ஏற்றும் வசதியுடன் உள்ளது.
இதனை டெக்சாவி நிறுவனம் நுகர்வோரின் தேவைகளை கருத்தில் கொண்டு உலகளாவிய சார்ஜ் ஏற்றும் நிலையத்தை ஒரு பெட்டியில் வைத்து வழங்கியுள்ளனர். 2013ல் வெளிவந்த சார்ஜர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு முன்னேற்றத்தை தற்போது இந்த சார்ஜரில் கொண்டு வந்துள்ளது.

 

 

இந்த சார்ஜரில் இணைப்பு அனைத்தும் தனித்தனியாக வெவ்வேறு ட்ராக்கில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன . இதனால் ஒரு சாதனத்தோடு மற்றொரு சாதனம் உரசி கீழே விழாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அணைத்து கேபிள் இணைப்புகளும் யாருக்கும் தெரியாத வண்ணம் அழகான முறையில் அடியில் மறைத்து வைக்கப்படுகிறது.அதே நேரங்களில் பயணங்களின் போதும் எளிதில் பைகளில் வைத்து சுமந்து  செல்லும் அளவிற்கு   எளிமையானது .
இதன் சார்ஜ் ஏற்றும் திறனும் மிக வேகமானதாகவும் உள்ளது. அதாவது ஒரு மணி நேரத்தில் 80 சதவிகித மின்திறனை சேமிக்கும் சக்தி கொண்டது. இதனால் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமான மின்னணு சாதனங்களுக்கு மற்ற சாதனங்களின் இடையூரு ஏதுமில்லாமல் மின்திறனை சேமிக்கலாம் .கம்பேஜியன் நிறுவனத்தில் இந்த சாதனத்தை பெற்று மகிழுங்கள் .இதனால் மின்கலன்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய வெவ்வேறு கேபிள்களை எடுத்து சிக்கலாக்கி கொள்ள தேவையில்லை..இதனால் சாதனங்களை ஒரே நேரத்தில்  சார்ஜ் செய்ய வெவ்வேறு கேபிள்களை எடுத்து  சிக்கலாக்கி கொள்ள  தேவையில்லை. இதனால் நமக்கு தேவைப்பட்ட நேரத்தில் எங்குவேண்டுமானாலும்  எப்போது வேண்டுமானாலும்  பயன்படுத்திக் கொள்ளலாம்

You might also like

Comments are closed.