சுருட்டி வைக்கக்கூடிய மிதிவண்டி :

மடிக்கணினி, மடித்தொலைக்காட்சி  வரிசையில்  தற்போது வந்துள்ளது  மடித்து வைக்கக்கூடிய  மிதிவண்டி. கற்பனை செய்து பாருங்கள்  ஒரு நிமிடத்தில் மடித்து வைக்கக்கூடிய  மிதிவண்டியுடன்  உங்கள் வழிகளை  நீங்களே  தேர்ந்தேடுத்துக்  கொள்ளவும்  சூரியனின்  வெளிச்சத்திற்கு  ஏற்ப  வெளிச்சங்களை  அட்ஜஸ்ட்  செய்து கொள்ளும் ஸ்மார்ட் லைட்டுகளும்  தானாகவே வாகனத்தை  பூட்டிக்கொள்ளும்  அம்சத்துடனும்  கூடிய மிதிவண்டியும் கிடைத்தால்    …..!

 

ஆம்…! தற்போது அர்ஜெண்டைனாவைச் சேர்ந்த மூவர் இந்த      gi-fly  bike குகளை  தயாரித்துள்ளனர் .இது ஒரு காகிதத்தை   போல் எளிதில் மடித்து  வைக்கக்கூடிய மிதிவண்டியாகும்.வடிவத்தில் இது ஒரு பழங்கால  மிதிவண்டி போல இருக்கும்.

ef909f41352018c8a5cb0b1d7caf9707_original

ஒரு சிறு நொடியில்  மடித்து வைக்கக்கூடிய இந்த  மிதிவண்டியில் gps  அமைப்பும், po 4 மின்கலன்  சேமிப்புடன்   40 மைல்களை  60k .m  வேகத்தில் கடக்கக் கூடியது.பஞ்சராகாத  டயர்களும்   எந்தவித  சப்தமோ  க்ரீஷோ , படியாமல் உங்கள் ஆடையை சுத்தமாக  வைத்துக் கொள்ள உதவும்.  இந்த அதிநவீன மிதிவண்டியை யாரும் திருடி விடுவார்கள்  என எண்ணி அஞ்ச தேவையில்லை  ஏனெனில்  இதில்  கூடுதல் சிறப்பம்சமாக பயனர்கள்  மிதிவண்டிகளுக்கு   5 அடிகளுக்கு  அப்பால் இருக்கும்போதே  தானாகவே  லாக் செய்து கொள்ளும். led  ஸ்மார்ட்  லைட்டுகளை  ரிமோட்  கண்ட்ரோலுடன்   தானாகவே  இந்த  பயன்பாடுகளின்   மூலம் கட்டுபடுத்தப்படுகின்றன.இந்த அணைத்து  அம்சங்களும்  சேர்ந்து  ஒரு பறக்கும்  அனுபவத்தை நமக்கு   தருகிறது.

 

இந்த பைக் தற்போது கிக்ஸ்டாட்டர் மற்றும் அமேசான் போன்ற மின் இணைய வாணிகத்தில் காணலாம்.

இந்த  மிதிவண்டி ஆகாயவிமானங்கள்  தயாரிக்கும் உலோகமான அலுமினியத்தை  கொண்டு  கட்டப்பட்டுள்ளது.37 பவுண்டு எடையும்  பாதியாக  மடித்துவிடும் அளவுக்கு  திறம் கொண்டது..இதனால் ஒரு பயணத்தின் போது  கூட  மிதிவண்டியை  எடுத்து  மடித்து   காரில் வைத்து கொண்டு  வைத்துக் கொண்டு செல்லாலம்.

மேலும் பல வியப்பூட்டும்  நன்மைகளும் உள்ளன:

உதாரணமாக  இந்த  சாதனம்   பயணங்களின் போது நமது போனிற்கு  ஜார்ஜ்  ஏற்றிக்  கொள்ளும் அளவிற்கு திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் மிதிவண்டியை விட்டு தள்ளி இருக்கும்போது  தானாகவே  லாக் செய்து கொள்ளும்  அளவிற்கு பாதுகாப்பானாது.cd8df238932dd8e7d4c76b01c027c155_original

உங்கள் பயன்பாட்டில் அன்லாக் செய்வதன் மூலம் உங்கள் நண்பரும் தற்காலிகமாக இரவலாக மிதிவண்டியை   பயன்படுத்தலாம்.தற்போது  கிக்ஸ்டாட்டரிலும் அதன் முன் உத்தரவுகளை $2290 க்கு விற்பனை செய்து வருகிறது.

Leave a Reply