ரூ.5லட்சம் பரிசு ! – சன் குழுமதின் ஐ.பி.எல் அணிக்கு நீங்கள் பெயர் சூட்டினால் !

சன் குழுமம் ஏலத்தில் எடுத்துள்ள ஐதராபாத் ஐ.பி.எல் அணிக்கு சூப்பர் பெயர் வைப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்று சன் குழுமம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு பதிலாக ஐதராபாத் நகரை மையமாகக் கொண்டு புதிய அணி உதயமாகியுள்ளது. இதனை சன் குழுமம் ஏலத்தில் கைப்பற்றியுள்ளது. இந்த புதிய ஐ.பி..எல் அணிக்கு பெயரை தேர்வு செய்வதற்காக போட்டி ஒன்றை அறிவித்துள்ளது சன் குழுமம்.

போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களுக்கு பிடித்தமான பெயரை தேர்வு செய்து அனுப்பலாம். அதற்கான விவரங்களை அறிய சன், கே, சன் மியூசிக், ஆதித்யா மற்றும் சுட்டி தொலைக்காட்சிகளைப் பார்க்கவேண்டும். அதில்தான் போட்டி குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பெயரை அனுப்பிய போட்டியாளருக்கு ரூ. 5,00,000 மெகா பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply