டிராப் பாக்ஸின் உதவி வழியே புதிய கடவுச் சொல்லாக உங்கள் முகத்தை மாற்ற முடியும்:

விண்டோவ்ஸ் 10  அதன் பதிப்பினை  வெளியிட்டதிலிருந்து  கொஞ்சம் கொஞ்சமாக  செயலிகள்  பலவற்றையும்  வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்   டிராப் பாக்ஸ் அதன் விண்டோஸ்-10இற்கான  “விண்டோவ்ஸ் ஹலோ”  என்ற  செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.  டிராப் பாக்ஸ்  என்பது இணையத்தில் நமது  முக்கியமான கோப்புகளை  சேமித்து வைப்பதற்கான  ஒரு தளமாகும்.  இவற்றில் இரண்டு வகையில் தரவேற்றம் செய்யலாம், ஈமெயில் போல இணைய பக்கத்தில் லாகின் ஆகி தரவேற்றம் மற்றும்  தரவிறக்கம் செய்யலாம். தங்கள் கணினியில் இருக்கும்   கோப்புகள், புகைப்படம், திரைப்படம், மென்பொருள் என அனைத்தையும் டிராப் பாக்ஸில் ´ ட்ராக் அண்ட் டிராப் ´செய்துவிட்டால், உலகில் எந்த மூலையில் இருந்தும் அதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.  இது சமீபத்தியமாக மைக்ரோசாப்ட் வெளியிட்ட  ஆபரேட்டிங் சிஸ்டத்தினை கருத்தில் கொண்டு   மாத்திரைகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டது.  இந்த டிராப் பாக்ஸ்   கவனிக்கத்தக்க ஒரு மாபெரும் மாற்றத்தை அறிமுகப்படுத்தியது.

download (1)
விண்டோவ்ஸ் ஹலோ  மூலம் ஒருவர்,  அவரது சாதனத்தினை பார்ப்பதன் மூலமாக   கடவுச் சொல்லாக  நமது முகத்தையே பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் கைரேகையையும்  கண்ணின் ஐரிசையும் கூட கடவுச் சொல்லாக உபயோகிக்கலாம். இவையனைத்தும் அவரவர் பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஏற்ப மாறுபடும்.   விண்டோஸ் ஹலோவினை,  டிராப் பாக்ஸில் அதிகளவிலான  முக்கிய  தரவுகள் இருப்பதனை கருத்தில் கொண்டு  இந்த  அம்சத்தை  துவக்கியுள்ளனர்.விண்டோவ்ஸ் ஹலோவை ஒருவர் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறை லாகின் செய்யும் போதும் கடவுச் சொல்லை டைப் செய்யத் தேவையில்லை. விண்டோவ்ஸ் ஹலோவில் சமீபத்தியமாக  நோக்கிய கோப்புகளை Jump Lists-இன் வழியாக பெறலாம். மற்றும்  விரைவான தேடல்களுக்கும்  உகந்தது. (தேடுதலுக்காக தேடு பொறியை நாட வேண்டிய அவசியமில்லை இந்த செயலியின் மூலம் டைப் செய்ய தொடங்கினாலே வேண்டிய கோப்புகளை கண் முன் கொண்டு வரும்) கூடவே கோப்புகளில் நேரடியாக கருத்துக்களை தெரிவிக்கலாம்.  உங்களது முக்கிய கோப்புகளுக்கு  உங்கள் முகத்தை கடவுச் சொல்லாக பயன்படுத்த  விரும்புபவர்கள் விண்டோவ்ஸ் ஹலோவை  விண்டோஸ் ஸ்டோரில் பதிவிறக்கி பயன்படுத்த  தொடங்கலாம்.

Leave a Reply