ஒரு நாளைக்கு 8 பில்லியன் பயனர்களை எட்டிய முகநூலின் வீடியோ காட்சிகள் !

715

 864 total views

முகநூலின் வீடியோக்கள் எப்போதும் ஒட்டுமொத்த சமூக வலை தளத்தையுமே   முலுங்குவதாகவே உள்ளது.முகநூலின் தலைமைச் செயல் அதிகாரி திரு.மார்க் ஜூக்கர் பர்க் புதன் கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையின்படி முகநூல் வீடியோக்களில் நாள் ஒன்றுக்கு 8 பில்லியனுக்கு மேலான ரசிகர்கள் குவிந்து கொண்டிருக்கும் சந்தோசமான செய்தியை பகிர்ந்து கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி வீடியோக்களை ரசிக்கும் பயனர்கள் எண்ணிக்கை 4பில்லியன் என கணக்கிடப்பட்டது . தற்போது இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது . 2014ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையை விட 8 மடங்கு அதிகமாகியுள்ளதையும் காணலாம்.இது ஒரு அதீத வளர்ச்சியைக் காட்டும் வியத்தகு செயலாகவே உள்ளது . ஆனாலும் தற்போது 1.55 பில்லியன் மாத பயனர்களை மட்டுமே கைவசம் கொண்டிருக்கின்ற நிலைமையிலும் வீடியோக்களை இரசிக்கும் பயனர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது முகநூலிற்கு பெரிய உறுதுணையே !

12187719_10102457977071041_6621115032203767724_n

தற்போது இந்த அறிக்கை முகநூலில் வித்தியாசமான வீடியோ பார்க்கும் பயனர்களுக்கும் யூ -டியூபில் வீடியோக்களை ரசிக்கும் பயனர்களுக்குமிடையே ஒரு போட்டியை உருவாக்யுள்ளது. கூகுளின் வீடியோ சேவையைப் பொறுத்து அதனைப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 30நிமிடத்திற்கு கணக்கிடப்படுகிறது . ஆனால் முகநூலில் இந்த எண்ணிக்கை மூன்று நிமிடங்களுக்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது . கூடவே முகநூலின் தானாகவே பிளே ஆகும் வீடியோக்களும் கொண்டிருப்பதால் வீடியோ உரிமையாளர்கள் பெரிதும் பயனடைவர்கள்.முகநூல் தற்போது இந்த விகிதத்தை மேலும் கூட்ட என்னென்ன யுக்திகளை மேற்கொண்டால் மேலும் சிறப்புற செய்யலாம் என்ற யோசனையில் உள்ளது.இந்த வருடம் கூடுதலாகவே 360 டிகிரி வீடியோக்கள் மற்றும் சுயவிவரப்பட வீடியோக்கள், போன்ற கூடுதல் அம்சங்களையும் அறிமுகபடுத்தி அதிக எண்ணிகையில் பயனர்களை வீடியோ காட்சிகள் பார்க்கத் தூண்டியது  குறிப்பிடத்தக்கதே !

முகநூல் பெரும்பாலும் அதன் முக்கிய செய்திகளை வீடியோக்களின் தொகுப்பாக மாற்ற வேண்டும் என்பதையே குறிக்கோளாக மாற்றியுள்ளது. இதனால் அதிக அளவிலான பயனர்களின் எண்ணிக்கை முகநூலிற்கு கண்டிப்பாக வருவாயை அதிகபடுத்துவதாகவே உள்ளன. ஒரு வாசகத்தை படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் அதனை ஒரு வீடியோ காட்சியாகவே பார்க்க அனைவரும் விரும்புவர்.இதனால்தான் வீடியோ பயனர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. இதனால் முகநூல் இணைய வாணிகம், செய்தி , பொழுதுபோக்கு மற்றும் அனைத்து வகை இணைய உள்ளடக்கத்தையும் முகநூலின் வீடியோக்கள் வழியே பகிரும் கூடுதல் அம்சத்தினை கொடுக்க உள்ளது .

You might also like

Comments are closed.