சாதியை பார்க்காதீர்கள் சாதித்ததைப் பாருங்கள்: #1 கணித மாயன் ராமானுஜர்.

511

 1,685 total views

11ம் வகுப்பில் இருந்து எனக்கு கணக்கின் மேல் ஒரு வெறுப்பு. வர்ணாசிரமம் எனும் அடிமையாக்கம் மற்றும் மதத் திருட்டு ஆசாமிகளால் White Cross போட்ட பல பழங்கால பிராமண மக்கள் மீதும், பல இக்கால பிராமண மக்கள் மீதும் எனக்கு வெறுப்பு உள்ளது. இது மனிதனை மனிதனாக மதிக்காத அனைவர் மேலும் எனக்கு உள்ள வெறுப்பு. இது தனி மனிதர் சார்ந்த வெறுப்பே ஒழிய.. ஒரு தொகுப்பு மக்களின் மீதான பொது வெறுப்பு அல்ல.

பாரதி பிராமண வகுப்பை சேர்ந்தவர் என.. அவரின் பெருமைகளை பேசுவதை தவிர்ப்பது எப்படி ஒரு மடமையோ.. அதே தான் ராமானுஜர் அவர்களை நிராகரிப்பது.

1887 –  1920 வெறும் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் அளித்துள்ள பல கணித தேற்றங்களும் கொள்கைகளும் இன்னும் பல கணித மேதைகளுக்கு புரியாத புதிராக உள்ளது.

இவரின் கொள்கைகளை புரிந்து கொண்ட பல மேதைகள் அதிக ஆச்சரியத்துடன் இவரைப் பார்க்கின்றனர்.

எடுத்துக்காட்டாக… ஒரு நாணயத்தை ஒரு கடையில் நீங்கள் கொடுக்கிறீர்கள், அதே நாணயம் ஒரு ஆண்டிற்குப் பிறகு எந்த நகரத்தில் இருக்கும் என அனுமானம் செய்வது.

நீங்கள் இரண்டு நாணயங்களை ஒரு கடையில் கொடுத்தால், ஒரு ஆண்டிற்குப் பிறகு அந்த இரண்டு நாணயங்களும் எவ்வளவு அருகில் இருக்கும் என அனுமாணிப்பது.

என பல கணிதக் கொள்கைகளை சர்வ சாதாரணமாக சொன்னவர் இவர்.

குறிப்பாக Entropy of Black Hole  எனும் மதிப்பை ஆராய முயலும் Stephen Hawking  போன்ற இக்கால இயற்பியலார்களுக்கு உதவும் வகையில் உள்ள “Mock Modular Form” எனும் கணிதக் கோட்பாட்டை இவர் வழங்கியுள்ளார்.  இவரின் கோட்பாடுகள் பற்றி தங்களுக்கு விளங்கவில்லை என பின் வருமாறு கூறுகிறார் Freeman.

“He had some sort of magic tricks that we don’t understand,” says Freeman Dyson of the Institute for Advanced Study in Princeton, New Jersey.

நமக்கு புரியாத விசயம் பற்றி பேசுகிறார்கள் என்பதால் அது உலகில் இல்லை என அர்த்தம் கொள்வது தவறு. நாம் படித்த கணித கோட்பாடுகள் நிகழ்காலத்திலும் உதவலாம்.

உங்களுக்குத் தெரிந்த Scientists  ரெண்டு பேர் சொல்லுங்கள் எனக் கேட்டால், தயங்காமல் சொல்லுங்கள்.. ஜி. நம்மாழ்வார் & ராமானுஜர் என்று…

You might also like

Comments are closed.