கூகளின் முதல் பலூன் இணைய சேவையை பெறும் நாடு இலங்கை

552

 1,672 total views

லூன் எனும் பெயரில் ஹீலியம்  அடைக்கப்பட்ட பலூன்களை விமானம் பறக்கும் உயரத்தை விட உயரமாக பறக்க விட்டு அதன் கீழ் உள்ள பகுதியில் WiFi வகை இணைய சேவையை வழங்க கடந்த சில ஆண்டுகளாக கூகள் ஆராய்ச்சி செய்து வந்தது.

பூமி முழுவதும் ஆயிரகணக்கான பலூன்களை பறக்க விட்டு இணைய சேவை கிடைக்காத இடமே இல்லை எனும் நிலையை ஏற்படுத்த கூகள் விரும்புகிறது. அதிகாரபூர்வமாக ​​முதன் முதலாக இலங்கை தீவு முழுவதும்  சேவை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை நிதி  அமைச்சர் ​​ஹர்சா டி சில்வா உடன் ​
​கூகள் இன்று (ஜூலை 30 2015) கையெழுத்திட்டுள்ளது.
google-project-loon-designboom04
2009 இல் நடந்த தமிழ் இனப்படுகொலைக்குப் பின்னர் இலங்கை அரசை ஒரு வளர்ச்சி மற்றும் நல்ல அரசாக பிம்பம் கட்டமைக்கும் பணியை தொடர்ந்து சர்வதேசம் செய்து வருகிறது. போப் போன்றோர் வருவதும், போரில் சிதைந்த ஊர்களில்  கட்டிடங்களை திறப்பதும், வெளிநாட்டு முதலீட்டை பெற்று சந்தையாக மாற்றுவதையும் இலங்கை அரசு பல நாடுகளின் உதவியுடன் செய்து வருகிறது.

இதை மற்றொரு கோணத்தில் அணுகுவதென்றால், “சில்க் ரூட்”​ ​ என்றழைக்கபடும் சீனாவின் முக்கிய வணிக கடல்வழிப் பாதையின் பெரிய ஒரே நிலபரப்பான இலங்கையைச் சுற்றி தன்  முழு கண்காணிப்புக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வழிமுறைகளில் ஒன்றாக இது மாறக்கூடும். ஏற்கனவே அமெரிக்க குடிமக்கள் கூகள் நிறுவனம் தனது வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனங்கள் அறிந்து கொள்ள வசதி செய்து தருவதை கண்டித்து வருகின்றனர்.

​​எளிமையாக இணையம் கிடைக்கும் வழி என்பதையும் தாண்டி மாபெரும் இனப்படுகொலையை சந்தித்த தமிழர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்மையான அரசியல் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டிய நிலை  உள்ளது.​

 

You might also like

Comments are closed.