ஆமை புகுந்த வீடு விளங்காது: ஏன்?

இதற்கு இரண்டு வித விளக்கங்கள் உண்டு:

௧(1).  கல்லாமை, இயலாமை, அறியாமை கொண்ட மக்கள் உள்ள வீடு விளங்காது.

௨(2). குளங்களும், கடற்கரை கொண்ட கிராமங்களில் ஆமைகளின் நடமாட்டம் இருக்கும். ஆமை போன்ற மிகவும் மெதுவாக நகரும் ஒரு பிராணி தம் வாசல், படி, ஆகியவற்றை தாண்டி வீட்டிற்குள் நுழைவது கூடத் தெரியாமல் வீட்டை பேணும் மக்கள் இருக்கும் அந்த வீடு எப்படி நன்றாக பேணிக் காக்கப்படும்?

என்னுடைய இந்த இரண்டாவது விளக்கம் எப்படி உள்ளது?

Leave a Reply