உங்கள் ஸ்மார்ட் போன்களை கேன்சர் சிகிச்சைக்கு உதவும் ஆராய்ச்சியாளனாக மாற்றலாம் :

உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து இரவு நேரங்களில் என்ன செய்வீர்கள்? பெரும்பான்மையாக மக்கள் அதனை அலாரம் வைக்க உபயோகிப்பார்கள். ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட் போனைக் கொண்டு புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் ஆராய்ச்சியில் உபயோகபடுத்தலாம்.

வோடபோணும் கார்வன் நிறுவனமும் இணைந்து இந்த ட்ரீம் லேப் மொபைல் பயன்பாட்டை வெளியிட்டுள்ளனர். இவை புற்று நோய் ஆராய்சிக்கு உந்துதலாக உள்ளன. வோடபோன் இந்த பயன்பாட்டை கொண்டு ஸ்மார்ட் போனை சூப்பர் கம்ப்யூட்டராக மாற்றும் என்று கூறுகிறது.ஒரு ஸ்மார்ட் போனை முழுவதுமாக பிளக்கில் சொருகி முழுவதுமாக சார்ஜ் ஏற்றிய பின் இந்த ட்ரீம் லேப் ஆப் தானாகவே மரபணுத் தகவல்கள் அடங்கிய ஒரு சுய விவரங்கள் அடங்கிய ஒரு சிறிய பகுதியை பதிவிறக்கம் செய்யும். இந்த தகவல்கள் அடங்கிய தொகுதியை கார்லன் நிறுவனத்தைச் சேர்ந்த அமேசான் வலைதளமே தருகிறது.

DreamLab-Android-Screenshots-1DreamLab-Android-Screenshots-2DreamLab-Android-Screenshots-3

இந்த மொபைல் ஆப்பில் ஸ்மார்ட் போனில் தகவல்கள் பதப்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் கார்வான் நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.பயனர்கள் இதில் எந்த மாதிரியான புற்று நோய் சிகிச்சைக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்கலாம் கூடவே எவ்வளவு அளவு மொபைல் தரவுகளை போனிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் போன்ற தகவல்களையும் கேட்கிறது . இதனால் கார்வன் நிறுவனம் அதன் செயல்முறையை புற்றுநோய் விஞ்ஞானிகளுக்கு உதவினால் அவர்கள் தற்போதயை வேகத்தை விட சுமார் 3,000 மடங்கு இன்னும் வேகமாக செயலாற்ற முடியும். அதே போல் ஐந்து மில்லியன் பயனர்களால் 150,000 மடங்கு அதிகரிக்கவும்  வாய்ப்புள்ளது.

 

இந்த மாதிரியான பயன்பாடுகளால் வெகு விரைவில் புற்று நோயினைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ஊக்கமளிப்பதால் கூடிய விரைவில் புற்று நோய் சிகிச்சையில் முன்னேற்றத்தை காணலாம் என கார்வன் மருத்துவ குழுவின் ஆராய்ச்சி குழுவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கம்ப்யூட்டிங் இலவச அணுகுதலை வழங்குவதை தவிர்த்து புற்றுநோய் ஆராய்ச்சியை வேகப்படுத்த பெரிதும் சாத்தியம் உள்ளது .இந்த பயன்பாடு துவக்கத்தில் அன்றாய்டில் கிடைக்கும்படி செய்யப்பட்டு உள்ளது. மிகக்குறுகிய காலத்திலேயே  ios போன்களில் கிடைக்கும்படி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.டிரீம் லேப் அனைத்து ஆஸ்திரேலிய அண்ட்ராய்டு பயனர்களுக்கும் Google Play ஸ்டோரிலிருந்து இலவச பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply