கடல் சீற்றத்தால் அழியும் நாடு

பசுபிக் கடல் பகுதியில் கிரிபாதி என்ற சிறிய நாடு அமைந்துள்ளது. இது பவழத் தீவுகளை கொண்டது. கடல் சீற்றம் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்வினால் இந்த நாட்டு மக்கள் தற்போது பெரிய பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இங்கு 32 வீடுகளுடன் இருந்த தீவு கடலில் மூழ்கி மாயமாகிவிட்டது.
எனவே இந்நாட்டு மக்கள் தற்போது வேறு இடத்திற்கு இடமாறும் முயற்சி நடந்து வருகிறது. இதன் ஜனாதிபதி அநோடி தோங் இது தொடர்பாக பிஜி நாட்டின் ராணுவ ஆட்சியாளருடன் பேச்சு நடத்தி தன்னுடைய நாட்டு மக்கள் குடியேற சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்று பிஜி நிலம் கொடுத்தால் கிரிபாதி நாட்டு மக்கள் தங்களது தீவுகளை விட்டு வெளியேறி புதிய இடத்தில் குடியேறுவார்கள்.
 பூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் இந்த பிரட்சணை வருங்காலத்தில் எந்த எந்த நாடுகளுக்கு ஏற்படப்போகின்றதோ தெரியவில்லை.  எனவே இயற்கை ஆர்வளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை சற்று கேட்டு நடந்தால் இது போன்ற நிலை மற்றவர்க்கும் வராது.

Leave a Reply