WordPress தளத்தின் விளம்பர சேவை

அனைவருக்கும் Google Ad sens பற்றி தெரிந்திருக்கும். பெருமாளான பதிவர்கள் onlineல் சம்பாதிக்கும் வசதியை இந்த Google Ad sens வழங்குகிறது. இணையத்தில் உள்ள வலைப்பூக்களை Google Ad sens இல்லாமல் பார்ப்பது அரிது. இப்பொழுது Google Ad sens போல WordPress தளம் WordAds எனும் புதிய விளம்பர வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதியை Federated Media என்ற தளத்துடன் இணைந்து WordPress தளம் வழங்குகிறது.  இனி பதிவர்கள் இந்த WordAds விளம்பரத்தையும் தங்கள் வலைப்பூக்களில் போட்டு அதன் மூலம் கணிசமாக சம்பாதிக்கலாம்.இந்த விளம்பர வசதியில் கலந்து கொள்ள சில தகுதிகளை இந்தத் தளம் நிர்ணயித்துள்ளது.

தகுதிகள்:

  • WordPress தளத்தின் வலைப்பூவாக இருக்க வேண்டும்.
  • அதுவும் Custom Domain(.com) வாங்கிய வலைப்பூக்களாக இருக்க வேண்டும்.
  •  மற்றும் Site Traffic, Site Content, language ஆகியவைகளை பொறுத்தே உங்கள் வலைப்பூவை அனுமதிப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இந்த தகுதிகள் உங்களுக்கு இருந்தால் இந்த http://en.wordpress.com/apply-for-wordads/ சென்று அவர்களின் அறிவிப்பை பாருங்கள். அப்படியே கீழே இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்புங்கள்.
Custom Domain இருந்தால் மட்டுமே application திறக்கிறது. அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் அவர்கள் உங்கள் பிளாக்கின் தகுதியைப்
பொறுத்து அனுமதி வழங்குவார்கள். WordPress தளங்களுக்கு மட்டும் வழங்குவதால் மற்ற வாசகர்களுக்கு ஏமாற்றம் தான்.

Leave a Reply