Word Tips

482

 1,505 total views

Word தொகுப்பில் தாமாகவே இயங்கும் format சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன், அடிக்கோடு அல்லது சிறிய வளைவுக் கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே word அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது word ஏற்படுத்திய border line ஆகும். தற்போது பயன்படுத்தப்படும் word தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது.

Step 1: கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும்.

Step 2: பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் click செய்திடவும்.

இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள்.

Step 3: அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.

Step 4: பின் அதில் Auto Format As You Type Tabற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள்.

Step 5: அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள tick அடையாளத்தை எடுத்துவிட்டு அனைத்திற்கும் OK tick செய்து மூடுங்கள்.

You might also like

Comments are closed.